புதன்கிழமை, ஜனவரி 15, 2025

100 கோடி வசூல் பத்தல.. மஞ்சுமல் பாய்ஸை ஓவர் டேக் செய்யும் அடுத்த படம்

Manjummel Boys: இப்போதெல்லாம் பிரம்மாண்ட பட்ஜெட் மற்றும் டாப் ஹீரோக்களின் படங்கள் 100 கோடி வசூலை எட்டுவதற்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் குறைந்த பட்ஜெட்டில் தரமான கதை இருந்தால் நிச்சயம் 100 கோடியை தாண்டலாம் என்பதை நிரூபித்திருக்கிறது மஞ்சுமல் பாய்ஸ்.

கடந்த மாதம் வெளிவந்த இப்படம் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றது. சோசியல் மீடியாவில் கூட எங்கு திரும்பினாலும் இந்த படம் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 150 கோடியை தாண்டி வசூல் வேட்டையும் நடத்தி இருக்கிறது.

Also read: ஓடிடியில் விலை போகாத மஞ்சுமல் பாய்ஸ்.. வசூலை கொட்டி குவித்தாலும் ஓரம் கட்டப்பட இதுதான் முக்கிய காரணம்

அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனாலயே இதை மிஞ்ச வேண்டும் என்ற ஆசையில் களமிறங்குகிறது பிரேமலு. கிரிஷ் ஏ டி இயக்கத்தில் பகத் பாஸில் உள்ளிட்ட இன்னும் சிலர் தயாரித்திருக்கும் பிரேமலு கடந்த மாதம் 9ம் தேதி வெளியானது.

தமிழுக்கு வரும் பிரேமலு

மேத்யூ தாமஸ், மமிதா பைஜூ ஆகிய பலர் நடித்திருக்கும் இப்படம் இளசுகளை கவரும் அட்டகாசமான காதல் கதையாகும். அதனாலயே படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதை பார்த்த ராஜமவுலியின் மகன் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி கடந்த வாரம் படத்தை வெளியிட்டு இருந்தார்.

தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததை ஒட்டி தற்போது தமிழிலும் வெளியாக உள்ளது. அதன்படி வரும் 15-ம் தேதி தமிழில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது வரை 100 கோடியை வசூலித்துள்ளது.

ஆனால் இந்த வசூல் பத்தாது என மஞ்சுமல் பாய்ஸை முந்த வேண்டும் என்ற ஆசையோடு தமிழுக்கு வருகிறது பிரேமலு. தற்போது தமிழில் பெரிய படங்கள் எதுவும் வராத நிலையில் இதன் மூலம் தியேட்டர் உரிமையாளர்களும் கல்லா கட்ட பிளான் போட்டுள்ளனர்.

Also read: நிஜ மஞ்சுமல் பாய்ஸால் கொடைக்கானலில் ஏற்பட்ட களேபரம்.. ரியல் குட்டனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த காமெடி நடிகர்

Trending News