புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஜவானை தொடர்ந்து தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அட்லீ.. தளபதியாக நடிக்கப் போவது யார் தெரியுமா?

Director Atlee: கோலிவுட்டில் தளபதி விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கி ஹிட் கொடுத்த அட்லீ, இப்போது பாலிவுட் பக்கம் சென்று விட்டார். இவர் இந்த ஜென்மத்தில் கோலிவுட் பக்கம் வருவதற்கான ஐடியாவே இல்லாதது போல் தெரிகிறது.

ஏனென்றால் தற்போது ஷாருக்கான்- நயன்தாரா ஜோடியை வைத்து ஜவான் படத்தை இயக்கி முடித்திருக்கும் அட்லீ, அடுத்ததாகவும் ஹிந்தி படத்தை தான் எடுக்க இருக்கிறார். அதுவும் அவர் இயக்கிய தளபதியின் தெறி படத்தை ஹிந்தி ரீமேக் செய்து தயாரிக்கப் போகிறார்.

Also Read: விஜய்யின் 69 ஆவது படத்திற்கு லட்டு மாதிரியான கதை.. அட்லீயை ஓரங்கட்டி சரியான இடத்தில் செக் வைத்த ஷங்கர்

இந்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது. அதுமட்டுமல்ல தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தளபதியாக யார் நடிக்கப் போகிறார் என்பதுதான் ஹைலைட். விஜய் நடித்த அந்த கேரக்டருக்கு கச்சிதமான ஒரு ஆளை தான் அட்லீ தேர்வு செய்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் வருண் தவான் தான் தெறி படத்தில் விஜய் நடித்த இரட்டை வேடங்களான விஜய்குமார் மற்றும் ஜோசப் குருவில்லா போன்ற இரண்டு கேரக்டர்களிலும் நடிக்கப் போகிறார். இவருடன் கதாநாயகியாக, சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

Also Read: முழுசாய் சொதப்பிய அட்லீ.. ஜெராக்ஸ் போல் அப்படியே ஷாருக்கானை வைத்து விளையாடிய சின்ன தம்பி

எனவே அதிரடியாக இணைந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு அடுத்த மாதம் மும்பையில் துவங்கப் போகிறது. அட்லீ பாலிவுட்டில் அழுத்தமாக கால் பதிக்க வேண்டும் என அடுத்தடுத்த முயற்சிகளில் தீவிரமாக இறங்கி கொண்டிருக்கிறார்.

அதில் ஒன்றுதான் தளபதியின் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கும். முதலில் தமிழ் சினிமாவில் விஜய்யின் ஆஸ்தான இயக்குனராக இருந்த அட்லீ இப்போது பாலிவுட்டில் கோலிவுட்டை காட்டிலும் பணத்தை அள்ளிவிடலாம் என்ற ஆசையில் புது புது முயற்சியில் ஈடுபடுகிறார். இருப்பினும் அவர் ஹிந்தி படத்தின் தயாரிப்பாளரானது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

Also Read: சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட இயக்குனர்.. கால்ஷீட் கொடுத்து லாக் செய்த ஆர்ஜே பாலாஜி

Trending News