புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வாரிசு நடிகரின் காதலை பிரிக்க அப்பா செய்த ராஜதந்திரம்.. உண்மைத் தெரிந்த பின் அசிங்கப்படுத்திய தமன்னா

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த தமன்னா தற்போது மீண்டும் களத்தில் இறங்கி உள்ளார். அதிலும் அவர் தற்போது ரஜினியுடன் இணைந்து நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் வாரிசு நடிகருடன் இவருக்கு இருந்த காதல் எப்படி முறிந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தமன்னா நடிகர் கார்த்தியுடன் இணைந்து பையா திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது அவர்களுக்குள் நிஜமாகவே கெமிஸ்ட்ரி பற்றி கொண்டது. அதன் விளைவாக கார்த்தி தான் நடிக்க இருந்த அடுத்த படத்திலும் தமன்னாவை ஹீரோயினாக போடும் படி தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்து இருக்கிறார்.

அதை மறுக்க முடியாத அவர் கார்த்தியிடம் சரி என்று சொல்லிவிட்டு அதை அப்படியே சிவக்குமாரிடமும் போட்டுக் கொடுத்திருக்கிறார். இப்படித்தான் இவர்களுடைய காதல் விவகாரம் கார்த்தியின் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கிறது. எப்போதும் குடும்பம், கலாச்சாரம் என்று பேசி வரும் சிவக்குமார் மூத்த மகன் சூர்யாவின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது ஊர் உலகம் அறிந்ததுதான்.

Also read: உயிருக்கு போராடும் பாபா , பிதாமகன் பட தயாரிப்பாளர்.. சூர்யா போல் இறங்கி வருவாரா ரஜினி?

அதன் பிறகு எப்படியோ அவர் சூர்யா, ஜோதிகாவின் திருமணத்தை நடத்திவிட்டார். ஆனால் கார்த்தியின் திருமணம் தன் இஷ்டப்படி தான் நடக்க வேண்டும் என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருந்தார். அப்படிப்பட்டவருக்கு இப்படி ஒரு செய்தி இடியாக வந்து இறங்கி இருக்கிறது. உடனே அவர் நாசுக்காக ஒரு பிளான் போட்டு தமன்னாவின் மேனேஜரை அழைத்து பேசியிருக்கிறார்.

அதாவது சிவகுமார் அந்த மேனேஜரிடம் கார்த்திக்கு விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும், அதுவரை தமன்னாவை தமிழ் படங்களில் கமிட் செய்யாமல் வேறு மொழி படங்களில் கமிட் செய்ய சொல்லியும் கேட்டுக்கொண்டாராம். அதற்கு சம்மதித்த அந்த மேனேஜரும் தமன்னாவை தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க கமிட் செய்து அவரை தமிழ்நாட்டு பக்கம் வரவிடாமல் செய்திருக்கிறார்.

Also read: தமன்னாவால் வாழ்க்கையை இழந்த பொன்னியின் செல்வன் நடிகர்.. கிசுகிசுக்க பட்டதால் ஏற்பட்ட பிரச்சனை

இதற்கு இடைப்பட்ட காலத்தில் கார்த்தி தன் அப்பாவிற்காக சினிமாவிற்கு சம்பந்தமில்லாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த உண்மை பல வருடம் கழித்து தான் தமன்னாவிற்கு தெரிய வந்திருக்கிறது. உடனே அவர் தன் மேனேஜரை வேலையை விட்டு தூக்கி இருக்கிறார். மேலும் இந்த விஷயத்தை நேரடியாக என்னிடம் கூறியிருந்தால் நானே கார்த்தியை விட்டு விலகி இருப்பேன் என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் முகத்திற்கு நேராக பேச முடியாத முதுகெலும்பு இல்லாதவர்கள் என அதில் சம்பந்தப்பட்டிருந்தவரை அசிங்கப்படுத்தியுள்ளார். இந்த காதல் தோல்விக்கு பிறகு அவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உடன் நெருக்கமாக பழகினார். ஆனால் அதுவும் கை கூடாத நிலையில் தற்போது ஒரு ஹிந்தி நடிகரை அவர் டேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: வித்தியாசமான புடவையில் மஜாவாக போஸ் கொடுத்த தமன்னா.. வைரலாகும் போட்டோ ஷூட்

Trending News