வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோவிற்கு பின் ஹீரோவுக்கு நிகராக சம்பளத்தை உயர்த்திய அனிருத்.. வெற்றிக்காக வாரி இறைக்கும் முதலாளிகள்

Music Director Anirudh: தற்சமயம் கோலிவுட்டின் டாப் நடிகர்களின் படங்களில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருப்பவர்தான் ராக் ஸ்டார் அனிருத். இளசுகளின் பல்ஸ் ரேட்டிங்கை சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு இசையமைப்பது தான் இவருடைய ஸ்பெஷாலிட்டி.

அனிருத், ஒவ்வொரு ஆண்டும் அரை டஜன் படங்களுக்கு இசையமைத்து மற்ற இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுத்து கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு பல பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். அதிலும் இவர் மியூசிக் போடும் படங்களின் பாடல்கள் எல்லாம் தாறுமாறாக இருக்கிறது. 

இப்போது லியோ படத்திற்கு பின் அனிருத்தின் ரேஞ்சே வேற லெவலுக்கு போய்விட்டது. இவர் ஹீரோக்களுக்கு நிகராக தன்னுடைய சம்பளத்தை கோடிக்கணக்கில் உயர்த்தி இருக்கிறார். லியோ படத்தில் 8 கோடி சம்பளம் வாங்கிய அனிருத், அந்த படத்திற்கு பிறகு அடுத்ததாக கமிட்டாகும் ஒவ்வொரு படத்திற்கும் 10 கோடியை சம்பளமாக வாங்குகிறார். 

படத்தின் வெற்றிக்காக அனிருத் கேட்கிற சம்பளத்தையும் தயாரிப்பாளர்கள் வாரி இறைக்கின்றனர். தளபதியின் லியோ படத்தை தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்  தலைவர் 170 படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார்.

இது மட்டுமல்ல அஜித்தின் விடாமுயற்சி, தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் மற்றும்  சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் படம் என அரை டஜன் படங்கள் தற்சமயம் அனிருத் கைவசம் இருக்கிறது. இது மட்டுமல்ல இவர் வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை நடத்தி அதிலும் சம்பாதித்து வருகிறார்.

அதுமட்டுமல்ல லோகேஷ் உடன் அனிருத் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கப் போகிறார். இந்த படத்தை ஸ்டன்ட் இயக்குனர்களான அன்பறிவ் இயக்க இருக்கின்றனர். இசையமைப்பாளராக இருக்கும்போதே 10 கோடி சம்பளம் வாங்கும் அனிருத், ஹீரோவாக என்ட்ரி ஆன பின்பு டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Trending News