வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோவை தொடர்ந்து தலைவர் 171ல் இணைந்த முக்கிய பிரபலம்.. தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் லோகேஷ்

Thalaivar 171 Movie Update: லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜயுடன் லியோ படத்தில் இணைந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஆயுத பூஜைக்கு படத்தை ரிலீஸ் செய்வதற்கான அடுத்த கட்ட ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் லோகேஷன் லியோ படத்தின் தொடர்ச்சியாக அவர் அடுத்ததாக இயக்கம் தலைவர் 171-வது படத்திலும் பிரபல நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைத்திருக்கிறது. பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனி லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Also Read: சூழ்நிலையை பொறுத்து உதவனும்.. சந்தடி சாக்கில் விஜய்யை சீண்டிய சூர்யா

இவர் காஷ்மீர் படப்பிடிப்பின் போது விஜய், சஞ்சய் தத் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக லோகேஷ் அடுத்து தலைவர் 171-வது படத்திலும் பாபு ஆண்டனி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.

பொதுவாக லோகேஷின் எல்யூசி படங்களில் தான் இது நடக்கும். அப்போ லியோ, தளபதி 171 இரண்டும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்சா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. லோகேஷ் தனது ஒவ்வொரு படங்களிலும் இருக்கும் கதாபாத்திரத்தை அப்படியே விட்டு விடாமல் அடுத்த படத்திலும் தொடர்ச்சியாக கொண்டு செல்வதால் அந்த படங்களை எல்யூசி யுனிவர்ஸ் படமாக்குகிறார்.

Also Read: ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யை அறைந்த இயக்குனர்.. ரகசியத்தை வெளியில் சொன்ன வில்லன்

அப்படி இருக்கும்போது இவர் லியோ படத்தில் இருக்கும் ஒரு நடிகரை அடுத்த படத்திலும் இணைத்து இருப்பது சூப்பர் ஸ்டார் மற்றும் தளபதி ரசிகர்களை குழப்பம் அடைய வைத்திருக்கிறது. ஆனால் லோகேஷ் மலையாள நடிகருக்கு தொடர்ந்து தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. மேலும் பாபு ஆண்டனி ரஜினியின் ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அவர் மீண்டும் 32 வருடம் கழித்து ரஜினியுடன் இணைந்திருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ராஷ்டகூட மன்னனாகவும் நடித்து அசத்தினார். அவர் தளபதி 171-வது படத்தில் இணைந்திருப்பது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Also Read: விஜய்யின் படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்த காமெடி நடிகர்.. இது என்னடா தளபதிக்கு வந்த சோதனை

Trending News