Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் கடந்த வருடம் மக்களின் பேவரிட் சீரியலாக இடம் பிடித்தது. அதற்கு காரணம் கதை, வசனம், கதாபாத்திரங்களின் எதார்த்தமான நடிப்பு அனைத்துமே கச்சிதமாக அமைந்ததால் அனைவரும் தூக்கிக் கொண்டாடினார்கள். ஆனால் எப்பொழுது குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து இல்லாமல் போனாரோ அப்பொழுதே இந்த நாடகம் தடம் புரண்டு விட்டது.
ஒரு நொடியில் திருச்செல்வம் எடுத்த முடிவு
ஏனென்றால் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு நடிக்க வந்த வேலராமமூர்த்தி. இவருடைய நடிப்பு நன்றாக இருந்தாலும் இந்த கதைக்கு ஏற்ற மாதிரியும் சீரியலில் பார்த்து ரசிக்கும் படியாகவும் இல்லை என்று மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்து விடக்கூடாது என்பதற்காக குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு வேறு ஒருவரை ஏற்பாடு பண்ணலாம் என்று இந்த நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம் கூறியிருக்கிறார்.
ஆனால் சன் டிவி சேனலில் இருக்கும் கலாநிதி மாறன் வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்கலாம் என்று வற்புறுத்தி சொல்லி இருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் அந்த கதாபாத்திரத்திற்கு வேலராமமூர்த்தி நடிக்க வைத்தார். ஆனால் இவர் வந்ததற்கு அப்புறம் கதையே மாறிவிட்டது என்று சொல்லும் அளவிற்கு எதார்த்தமான கதை காணாமல் போய்விட்டது.
இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் ரொம்பவே பின்னடைவை சந்தித்து எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரம் ஏழாவது இடத்திற்கு போய்விட்டது. இதை தெரிந்த சன் டிவி சேனல் மறுபடியும் திருச்செல்வத்திடம் சீரியலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கதையை வேற மாதிரி கொண்டு வாருங்கள் என்று பல ஐடியாக்களை கொடுத்து இருக்கிறார்கள்.
அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாத திருச்செல்வம் தொடர்ந்து கதையை பயணித்து வந்ததால் கடைசி நேரத்தில் சன் டிவி சேனலிடமிருந்து ஒரு மெயில் போயிருக்கிறது. அந்த மெயிலை பார்த்த அந்த நொடியிலேயே திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலுக்கு எண்டு கார்டு போட்டு விடலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறார்.
அப்செட் ஆன ஆர்டிஸ்ட்கள்
அதன்படி கிளைமாக்ஸ் நோக்கி கதையை எழுதி இருக்கிறார். ஆனால் இவர் இந்த முடிவை எடுத்ததை கடைசி வரை இந்த நாடகத்தில் நடித்த எந்த ஆர்டிஸ்ட்களுக்கும் தெரியப்படுத்தவில்லை. கடைசி எபிசோடு நிறைவு பகுதியாக எடுக்கும் தருணத்தில் தான் திருச்செல்வம் அனைவரையும் கூப்பிட்டு இந்த மாதிரி ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். இதை கேட்டு அனைவரும் ரொம்பவே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
ஏனென்றால் திருச்செல்வம் நாடகத்தைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட 1000 எபிசோடு வரை போகும் என்று ஆர்டிஸ்ட்கள் நம்பி இருந்திருக்கிறார்கள். தற்போது இந்த அவசர முடிவால் அவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் இந்த நாடகத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வந்தாலும் தற்போது முடியும் தருவாயில் அனைவரும் இந்த நாடகத்தை பார்க்காமல் இருக்க முடியாது.
ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பிக் கொண்டு வருகிறார்கள். ஒருவேளை சன் டிவி சேனல் தரப்பிலிருந்து இந்த நாடகத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் இன்னும் எதிர்நீச்சல் பல வருடங்களாக ஓடி இருக்கும்.
முடிவை நோக்கி பயணிக்கும் எதிர்நீச்சல் சீரியல்
- கதை சொதப்பியதால், அதிரடி காட்டும் ஜீவானந்தம்
- குணசேகனுக்கு கோர்ட்டில் கிடைக்கப் போகும் தீர்ப்பு
- குணசேகரன் பக்கம் முழுசா சாய்ந்த தம்பிகள்