புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மேடையில் கதறி அழுத சமந்தா.. அதிர்ச்சியில் படக்குழு

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் முன்னணி நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் “மயோசிடிஸ்” என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டு மீண்டும் நடிக்க தயாராகிவிட்டார். தற்போது அவர் நடித்துள்ள “சாகுந்தலம்” படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இப்படம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட காளிதாசனின் சமஸ்கிருத நாடகமான “அபிஜ் ஞான சாகுந்தலம்” என்ற நாடகத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இப்படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இதில் சமந்தா, தேவ் மோகன் மற்றும் கௌதமி நடித்துள்ளார்.

Also read: சிகிச்சைக்குப் பின் பிரமோஷனில் கலந்து கொண்ட சமந்தா.. பல பலனு பப்பாளி பழம் போல் மாறிய புகைப்படம்

இதில் வரும் கதைகள் மகாபாரதத்தில் இருந்து சகுந்தலா மற்றும் மன்னர் துஷ்யந்தி காவியமான காதல் கதையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இத்திரைப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். இந்த வருடத்தில் சமந்தாவிற்கு முதல் படமாக இது அமைந்துள்ளது.இப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்துள்ளது. அதில் சமந்தா நீண்ட இடைவேளைக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

இப்படத்தின் இயக்குனர் குணசேகர் உண்மையான ஹீரோ சமந்தா தான் என்று புகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சமந்தாவின் நடிப்பையும் திறமையும் பாராட்டியுள்ளார். இதைக் கேட்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு மேடையில் அழுதிருக்கிறார். இந்த விஷயம் தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: தீராத உடல் பிரச்சினை.. பல வருட கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா

ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த நிலையில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகி வருகிறது. இது சமந்தாவை அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவருக்கு திருமண வாழ்க்கை பெரிதாக அமையவில்லை.

மேலும் இவர் நோயால் பாதிக்கப்பட்டு அதிகமான துன்பங்களை பார்த்து வருகிறார். இத்திரைப்படம் மூலம் அவருக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார். இவர் தற்போது வெப் சீரிஸ் மூலமும் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் இந்தப் புது வருடம் அவருக்கு அடுத்தடுத்த வெற்றிகளை கொண்டு வந்து சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: மனதளவில் சித்திரவதை செய்யப்பட்ட சமந்தா.. ஆண் நண்பர் கூறிய ரகசியத்தால் ஆடிப்போன நாக சைதன்யா

Trending News