ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சிம்புவின் அடுத்த 4 தரமான படங்கள்.. அடிமை போல இருக்குறவன் அரசனை போல உழைப்பான்

நடிகர் சிம்புவின் படங்கள் சில வருடங்களாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சிம்புக்கு மீண்டும் ஒரு கம்பக் கொடுத்த படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. பலநாள் ஏக்கத்தில் இருந்த சிம்புவின் ரசிகர்களுக்கு மாநாடு படம் ஒரு விருந்து போல் அமைந்தது.

மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாளாக ரிலீசுக்கு காத்து இருந்தது. இப்படம் வெளியாக பல தடைகளை சந்தித்தது. தடைகளை மீறி மாநாடு படம் வெளியான முதல் நாளே 8.24 கோடி வசூல் செய்தது. மாநாடு படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து சிம்பு மூன்று படங்கள் நடித்து முடித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்த காடு. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களில் சிம்பு ஏற்கனவே நடித்துள்ளார். சிம்புவின் 47வது படமான வெந்து தணிந்த காடு படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், கிருஷ்ணன் இயக்கத்தில், சிம்பு, கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் பத்து தல. கன்னடத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற முஃப்தி படத்தின் ரீமேக் தான் பத்து தலை.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்திற்கான இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள கொரோனா குமார் படத்தை கோகுல் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிம்பு நோயாளியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

வெந்து தணிந்தது காடு, பத்து தல மற்றும் கொரோனா குமார் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இயக்குனர் ராம் சிம்புவை வைத்து ஒரு படத்தை உடனடியாக தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் தயாராக உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்.

Trending News