வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வாய்ப்பு கேட்டப்போ அசிங்கப்படுத்திட்டு வலியப்போய் கெஞ்சும் தயாரிப்பாளர்கள்.. மாஸ் காட்டும் குட்டி பவானி

குழந்தை நட்சத்திரமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கியவர் தான் மகேந்திரன். ஆனால் அவர் இளம் கதாநாயகனாக வலம் வர நினைத்தபோது தமிழ் சினிமாவே அவரை பார்த்து ஏளனமாக சிரித்தது.

அதுமட்டுமில்லாமல் பல தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு கேட்டு போகும்போது பலவந்தமாக அசிங்கப்படுத்தினார்கள். உனக்கெல்லாம் ஹீரோ ஆசை வந்திருச்சா என முகத்துக்கு நேர் கேட்டு சங்கடப்படுத்தி விட்டார்களாம்.

குழந்தை நட்சத்திரமாக அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முதல் சாய்ஸாக இருந்த மகேந்திரன் வளர்ந்த பிறகு காணாமல் போய் விட்டாரே என்ற கவலை அனைவருக்குமே இருந்தது. ஆனால் மாஸ்டர் என்ற ஒற்றை படத்தின் மூலம் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்துள்ளார் மாஸ்டர் மகேந்திரன்.

இதற்காக மகேந்திரன் லோகேஷ் கனகராஜுக்கு கோயில் கட்டி கும்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மாஸ்டர் படத்திற்கு பிறகு மகேந்திரனின் வளர்ச்சியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தினமும் குறைந்தது இரண்டு தயாரிப்பாளர்களாவது மகேந்திரன் வீட்டின் முன்பு காத்துக் கிடக்கிறார்களாம்.

அதைவிடக் கொடுமை என்னவென்றால், மகேந்திரன் வாய்ப்பு கேட்டு சென்ற போது அசிங்கப்படுத்திய அதே தயாரிப்பாளர் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் அவரிடம் கால்சீட் கேட்டதுதானாம். இதையெல்லாம் நினைத்து மகேந்திரன் மனதிற்குள்ளேயே சிரித்து கொள்கிறாராம்.

வந்தது 15 நிமிடமாக இருந்தாலும் அடுத்த பதினைந்து வருடத்திற்கு மாஸ்டர் பர்பாமன்ஸ் நின்று பேசும். மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள சில படங்கள் வெளியாக உள்ளன. மேலும் தான் நடிக்கும் படங்களுக்கான கதையை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வருகிறாராம் மகேந்திரன். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம்.

mahendran-master-cinemapettai
mahendran-master-cinemapettai

Trending News