நயன்தாரா(nayanthara) நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்த திரைப்படம்தான் மூக்குத்தி அம்மன்.
ஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கியிருந்த இந்தப் படம் நயன்தாராவின் சினிமா கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. நயன்தாரா எப்படி அம்மன் வேடத்திற்கு பொருத்தமாக இருப்பார்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த படம் அமைந்தது.
அதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் பல படங்கள் உருவாகி ரிலீசுக்கு ரெடியாக இருந்தாலும் தற்போது வரை எந்தப் படமும் வெளியாகவில்லை. தற்போது மீண்டும் ஒரு படம் நேரடி ஓடிடியில் வெளியாக உள்ளதாம்.
வினேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் முதன்முதலாக உருவான திரைப்படம்தான் நெற்றிக்கண். பார்வை தெரியாத பெண்ணாக நயன்தாரா நடித்திருந்த இந்தப் படத்தின் டிரைலர் வெளியான போதே சமீபத்தில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த சைக்கோ படத்தை போலவே இருக்கிறது என்ற பேச்சுக்கள் பரவலாக அடிபட்டது.
இருந்தாலும் அதையெல்லாம் மீறி நெற்றிக்கண் திரைப்படம் தற்போது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் திரையரங்குகள் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருவதாக படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நேரடியாக ஓடிடியில் வெளியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் கூடுதல் தகவல். இதில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களும் விலை பேசப்பட்டு வருகிறதாம்.