நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வாரிசு, துணிவு படங்களின் பரபரப்பில் இருந்த திரையுலகம் தற்போது அடுத்ததாக இந்த திரைப்படத்தின் ரிலீஸை தான் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற பரபரப்பும் ஒரு பக்கம் இருக்கிறது. மேலும் சிபி சக்கரவர்த்தி, பிரதீப் ரங்கநாதன் என ஒவ்வொரு இயக்குனர்களின் பெயர்களும் மாறி மாறி அடிபட்டு வந்தது. தற்போது இயக்குனர் பி வாசு தான் ரஜினியை இயக்கப் போகிறார் என்ற பேச்சும் கிளம்பி இருக்கிறது. ஆனால் இது எதுவும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் கிடையாது.
Also read: புதுமுக இயக்குனர்களை நம்பி ஏமாந்தது போதும்.. ஜெயிலருக்கு பின் தன்னை ராஜாவாக்கிய இயக்குனருடன் கூட்டணி
இந்நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் ஞானவேல் ரஜினிக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பே அவர் சூப்பர் ஸ்டாரை சந்தித்து அந்த கதையை கூறி இருக்கிறார். அதில் இம்ப்ரஸ் ஆன ரஜினி இது என்னுடைய படமாக இருக்கக் கூடாது ஜெய் பீம் மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் படியாக இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு இருக்கிறார்.
ஏனென்றால் தற்போது ரஜினி கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். தன்னுடைய படத்தில் வழக்கமாக இருக்கும் ஸ்டைல் போன்ற எதுவும் வேண்டாம் என்றும் அவர் முடிவு செய்து இருக்கிறார். அதனாலேயே அவர் இப்போது கதையில் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறாராம். மேலும் ரஜினி இப்போது தன்னுடைய ரூட்டை மாற்றி இருப்பதும் பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
Also read: சூப்பர் ஸ்டார் காதுக்கு போன விஷயம்.. ஜெயிலர் படத்தால் பரிதவிக்கும் நெல்சன்
அதற்காகவே ஞானவேல் இப்போது ரொம்பவும் கவனமாக ஸ்கிரிப்ட்டை தயார் செய்து கொண்டிருக்கிறார். ஜெய் பீம் திரைப்படம் சூர்யாவுக்கு எந்த அளவுக்கு பாராட்டை பெற்றுக் கொடுத்ததோ அதை விட பல மடங்காக இந்த கதை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் ரஜினி தரப்பிலிருந்து இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த முடிவும் உறுதியானது கிடையாது.
அந்த வகையில் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட டைரக்டர் யார் என்ற அப்டேட்டுக்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது ஜெயிலர் திரைப்படம் கிட்டத்தட்ட 70 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்த பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கும் தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also read: 3 முறை அஜித்தை தயாரித்தும், ஆணவம் வரல.. நம்பர் ஒன் விவகாரத்தை கையில் எடுத்த போனி கபூர்