கொரோனா காலகட்டத்தில் அனைத்து பள்ளிகளும் மூடியிருப்பதால் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பிஎஸ்பிபி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையில் பெண் பிள்ளைகளை அந்த மாதிரி டார்ச்சல்களுக்கு உட்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சென்னையில் முக்கிய பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளிடம் இதேபோல் தான் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாற்று எழுந்தது.
அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது போலீஸ் விசாரித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் சென்னையில் மேலும் ஒரு பள்ளியில் இது போன்ற சம்பவம் நடந்து வருவதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் பிரபல பள்ளியான பி எஸ் சீனியர் செகோண்டரி பள்ளியில் 8 ஆசிரியர்கள் இது போன்ற கேவலமான செயலில் ஈடுபட்டிருப்பதாக பிரபல பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இந்த பள்ளியின் பெற்றோர்கள். பிஎஸ்பிபி அடுத்து பல பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வித் துறை அமைச்சர் ஆன்லைன் வகுப்புக்கான நெறிமுறைகளை செயல்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில்.
இதுபோன்ற புகார்கள் பெற்றோர்களுக்கு பெரும் வருத்தம் அளிக்கின்றது, வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே மாணவிகளை புகைப்படம் எடுப்பது, தொட்டு பேசுவது என் உடம்பு கூசும் அளவிற்கு செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
சின்மயி கூறியது போல் அந்த 8 ஆசியுடன் பெயரை கமெண்ட்களில் பதிவு செய்துள்ளனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை காவல்துறை விசாரணை நடத்தினால் தான் தெரிய வரும்.
இந்த சம்பவத்தை அந்த பள்ளியில் படித்த பழைய மாணவிகள் வெளிக்கொண்டு வந்து இருப்பதாகவும். அதற்கான தெளிவான ஆதாரங்களை போலீசாரிடம் விரைவில் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பள்ளி நிர்வாகம் ஆட்டம் கண்டு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.