ராகவேந்திரா சாமிக்கு பின் சூப்பர்ஸ்டார் மதிக்கும் சாமி இதுதான்.. வெளிப்படையாக மேடையில் பேசிய ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 168 படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது 169 வது படமான நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், படத்தின் பிஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனிடையே சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல், நடிப்பு, நடனம், வசனம் என பலவற்றை ரசித்து பார்க்கும் நாம், அவர் ஒரு மதத்திற்கு மட்டும் அதிகமான முக்கியத்துவம் தந்து நடித்து வந்ததையும் பார்த்திருப்போம்.

நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா சாமி பக்தர் என்பதால் அவ்வப்போது இமயமலைக்கு சென்று தரிசனம் செய்து வருவார்.ஆனால் இவரின் படங்களில் பயன்படுத்தும் வசனங்கள், பெயர்களில் அதிகமாக நம்மால் ராகவேந்திரா சாமியின் அடையாளத்தை பெருமளவில் பார்த்திருக்க முடியாது. ஏன் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா சாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களாக பாபா படமும், ஸ்ரீ ராகவேந்திரா சாமி படம் மட்டுமே உள்ளது.

Also Read :  சூர்யா பட இயக்குனரை வளைத்து போட்ட ரஜினி.. தேசிய விருதுக்காக போட்டிருக்கும் பலே திட்டம்

ஆனால் பல படங்களில் இஸ்லாமிய பெயர்களையும்,இஸலாமியர்களின் வணக்க வழிபாடுகளையும் ரஜினியின் படங்களில் நம்மால் அதிகம் பார்க்க முடியும். உதாரணமாக பாபா படத்தில் ரஜினி வேலை செய்யும் காய்கறி அங்காடியின் பெயர் அல்லா அருணாச்சலம் என இருக்கும். அதே போல ஒரு படத்தில் சிறையில் கைதியாக வலம் வந்த ரஜினியின் நம்பரானது 786 என்ற இஸலாமிய நம்பரையே குறிக்கும்.

இதற்கும் மேலாக இன்று வரை பட்டித் தொட்டி எங்கும் கலக்கி வரும் சிறந்த காங்ஸ்டர் படமான பாட்ஷா படத்தில் கூட அன்வர் என்ற இஸ்லாமிய நபரின் கதாபாத்திரம் தெறிக்கவிட்டிருக்கும். மேலும் சில வருடங்களுக்கு முன்பாக வெளியான பேட்ட, காலா உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் இஸ்லாமிய முறைப்படி தொழுவும் காட்சிக்கூட இடம்பெற்றிருக்கும்.

Also Read : ரஜினியை பின்பற்றி வளர்ந்து வரும் விஜய், அஜித்.. வசமாக மாட்டிக் கொண்ட வாரிசு, துணிவு பட பிரமோஷன்

இதனிடையே ரஜினிகாந்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் உள்ள ஒற்றுமை குறித்து இயக்குனர் ஷங்கரின் நடிப்பில் வெளியான 2.0 ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது சூப்பர் ஸ்ட்டாரே வெளிப்படையாக பேசினார். அந்த மேடையில் இஸ்லாமியர்களின் வணக்க மொழியான அஸ்ஸலாமு அலைக்கும் என தெரிவித்து, தனது உரையை தொடங்கினார். அதில் தான் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக வேலை செய்து கொண்டிருக்கும்போது, தன்னை சுற்றியுள்ள அனைத்து நண்பர்களும் இஸ்லாமியர்கள் தான் என தெரிவித்தார்.

மேலும் தான் சென்னைக்கு வந்த போது, நண்பனின் வீட்டில் இருந்ததாகவும், அந்த வீட்டின் உரிமையாளர் இஸ்லாமிய ர்தான் என்றும் தெரிவித்த அவர், தான் வசித்து வரும் போயஸ் கார்டன் இல்லத்தின் முதல் உரிமையாளர் ஒரு இஸ்லாமியர் தான் என ரஜினிகாந்த் தெரிவித்தார். தனக்கு இப்போது வரை அதிகமான இஸ்லாமியர்கள் உள்ளனர் என தெரிவித்த ரஜினிகாந்த், பல மேடைகளில் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற வார்த்தையை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : பொன்னியின் செல்வனுக்கு முந்திக்கொண்ட ரஜினி.. ரணகளமாக வெளியான ஜெயிலர், இந்தியன் 2 பட ரிலீஸ் தேதி