கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்திற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவரது படங்கள் தமிழகத்தில் வெளியாவதை போலவே வெளிநாடுகளிலும் வெளியாகும். அங்கும் முதல் நாள் ஷோ ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
பெரும்பாலும் ஜப்பானியர்கள் தான் ரஜினி படங்களை விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான முத்து, அருணாச்சலம் போன்ற படங்கள் ஜப்பானில் நல்ல வசூல் பெற்றன. அங்கு ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை ரஜினி படங்கள் மட்டுமே ஜப்பானில் வெளியாகி வந்த நிலையில், தற்போது கார்த்தி படம் ஜப்பானில் வெளியாக.
ரஜினிக்கு அடுத்தபடியாக ஜப்பானில் முதல் முறையாக வெளியாகும் நடிகரின் படம் என்றால் அது கார்த்தி தான். கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் மாபெரும் வெற்றி பெற்றது.
விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திற்கு போட்டியாக வெளியான கைதி படம் அதனை ஓவர் டேக் செய்து வசூலில் சாதனை படைத்தது. ஒரே ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் தற்போது இப்படம் ஜப்பானில் ஜப்பானிய மொழியில் வெளியாக உள்ளதாம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவே வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வரும் நவம்பர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதுவரை ரஜினிகாந்த் படங்கள் மட்டுமே ஜப்பானில் வெளியாகி வந்த நிலையில் தற்போது முதல் முறையாக கார்த்தி படம் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கைதி படம் ஜப்பானில் வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.