திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

என்னது சமந்தாவும் விவாகரத்து இல்லையா? விட்டா கிருக்கனா ஆக்கிடுவாங்க போல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். நான்கு வருடங்கள் பிறகு சமந்தா நாகசைதன்யாவின் குடும்ப பெயரான அக்கேனியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார்.

அதன்பிறகு இவர்களது விவாகரத்து குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் விவாகரத்திற்கு பின்பு சமந்தா படங்களில் பிஸியாக இருந்தார். சமீபத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா ஆடிய நடனம் வைரல் ஆனது.

நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுன் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் சமந்தா எங்கள் குடும்பத்தை விட்டு சென்றிருந்தாலும் என்றும் என் மகள் தான் என கூறியிருந்தார். இதேபோல் நாக சைதன்யாவும் சமந்தாவை பற்றி நல்ல படியாகவே தெரிவித்தார்.

சமந்தாவின் சந்தோசம் தான் எனக்கும் சந்தோஷம், திரையில் அவர்தான் எனக்கு சிறந்த ஜோடி, இப்பவும் எனக்கு சமந்தாவை பிடிக்கும் என அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் சமந்தா, நாகசைதன்யாவை பற்றி எதுவும் பேசாமல் படங்களில் பிஸியாக இருந்தார்.

அவ்வப்போது உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் சமந்தா அவரின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து குறித்து பதிவிட்டு இருந்த பதிவை நீக்கியுள்ளார்.

இதனால் சமந்தாவும் நாக சைதன்யாவும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புள்ளது என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். என்னடா இது அவங்களை சண்டை போட்டு அவர்களை சேர்ந்துகிறார்கள் என்ற குழப்பத்தில் தற்போது ரசிகர்கள் உள்ளனர். சமந்தா செய்த செயலால் திரையுலகமே ஆடிப்போய் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் நம்மளையே கிறுக்கனா ஆக்கிட்டாங்க என்பது போன்ற பதிவுகளை ரசிகர்கள் ஒரு புறம் வெளியிட்டு தான் வருகின்றன. ஆனால் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே என்ன என்பது தெளிவாகத் தெரியவரும்.

Trending News