ராஜமௌலி தற்போதைய இந்திய சினிமாவே கவனிக்கப்படும் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அடுத்ததாக ராஜமௌலி இயக்கத்தில் பிரபல மாஸ் நடிகர் நடிக்க உள்ளாராம்.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் ராஜமௌலி. தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.
RRR படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் கூட இருவரின் டீசரும் தனித்தனியே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் மற்றொரு மாஸ் நடிகர் மகேஷ்பாபு நடிக்க உள்ளாராம். இதற்காக பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் பலத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறுகின்றனர்.
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவுக்கு மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான நடிகராக உள்ளார். கடைசியாக மகேஷ் பாபு நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நேரடி தமிழ் படமாக வெளியான ஸ்பைடர் திரைப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் மகேஷ்பாபுவுக்கு கணிசமான தமிழ் ரசிகர்கள் இருப்பதால் ராஜமௌலியின் படம் தமிழ் சினிமாவிலும் தனக்கு ஒரு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுக்கும் என முழுதும் நம்பியுள்ளார் மகேஷ் பாபு.