செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சர்தார் படத்திற்குப் பிறகு குவியும் பட வாய்ப்பு.. மாஸ் வில்லனுக்கு ஜோடியாகும் லைலா

பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற லைலா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளார். குடும்பம், குழந்தைகள் என அதை பார்ப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தார். மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு சர்தார் படத்தில் லைலா நடித்திருந்தார்.

கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடியது. லைலாவுக்கு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் பலரின் பாராட்டை சம்பாதித்த லைலாவுக்கு அடுத்தஅடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Also Read : திரையரங்கை துவம்சம் செய்த சர்தார்.. ஒரு மாதத்துக்குள்ளே ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தற்போது வதந்தி என்ற வெப் சீரிஸில் லைலா நடித்துள்ளார். கொலைகாரன் படத்தின் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் திரில்லராக இந்த வெப் சீரிஸை எடுத்துள்ளார். மேலும் வெற்றி இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தங்களது வால்வாட்சர் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளனர்.

இந்த வெப் தொடரில் முதல் முறையாக லைலாவுக்கு ஜோடியாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்களில் மாஸ் வில்லனாக எஸ் ஜே சூர்யா மிரட்டி வருகிறார். இப்போது வெப் சீரிஸிலும் களமிறங்கி ஒரு கை பார்க்க உள்ளார்.

Also Read : 22 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரை சந்தித்த லைலா.. இந்த ஜோடி நல்ல ஜோடி தான்

மேலும் நாசர், சஞ்சனா மற்றும் பலர் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர். இத்தொடர் மிக விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தொடரிலும் மிக வலுவான கதாபாத்திரம் லைலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆகையால் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ள லைலா தற்போது உள்ள இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி முன்னர் இருந்ததைவிட இப்போது தான் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

Also Read : இன்று வரை மீளா துயரத்தில் எஸ்ஜே சூர்யா.. சூப்பர் ஸ்டார் நண்பரால் கைவிட்டுப்போன படம்

Trending News