சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பரிதாபமான நிலையில் தனுஷ்.. இப்ப கூட இது தேவையா ஐஸ்வர்யா!

திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு விஷயம் தனுஷ் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிக்கை. உலக அளவில் பிரபலமாக இருக்கும் ரஜினிகாந்தின் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது திரையுலகில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் இது பற்றிய எந்த ஒரு விளக்கத்தையும் அவர்களின் குடும்பம் சார்பாக யாரும் இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்கள் இருவரும் விரைவில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது இந்த பரபரப்பு சற்று ஓய்ந்து வருகிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்கள் பிரிவை உறுதிப்படுத்திய பின்னர் அவரவர் வேலைகளில் பிசியாகி விட்டனர். தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது அதில் பங்கேற்று வரும் தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் யாரிடமும் பேசுவதில்லையாம். தன்னுடைய காட்சிகள் முடிந்தவுடன் தனிமையை தேடி சென்று விடுகிறாராம்.

பொதுவாக தனுஷ் தன் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டால் உடனே சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விடுவார். அதனால்தான் தற்போது அவர் இருக்கும் மனநிலையில் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி அதை மறக்க முயற்சி செய்கிறார். இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் சோகமே உருவாக இருப்பது அனைவருக்கும் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறதாம்.

அவர் இப்படி இருக்க அதற்கு நேர் மாறாக அவரின் மனைவி ஐஸ்வர்யா பார்ட்டி, தோழிகளுடன் அரட்டை என்று ஜாலியாக நேரத்தை செலவிட்டு வருகிறாராம். அதிலும் வரும் காதலர் தினத்திற்காக ஒரு ஸ்பெஷல் லவ் சாங்கையும் அவர் டைரக்ட் செய்து வருகிறாராம். விவாகரத்து குறித்த எந்த வருத்தமும் அவரிடத்தில் இல்லையாம்.

aishwarya-dhanush
aishwarya-dhanush

விவாகரத்து ஆனால் என்ன அப்பாதான் இருக்கிறாரே என்ற எண்ணத்தில்தான் ஐஸ்வர்யா தற்போது இருக்கிறார். அதனால்தான் அவரால் இவ்வளவு இயல்பாகவும், ஜாலியாகவும் இருக்க முடிகிறது. ஆனால் தனுஷோ தன் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த வேதனையில் தான் இருக்கிறார். தற்போது இந்த விவாகரத்து அறிவிப்பு கூட ஐஸ்வர்யாவின் விருப்பத்தின் பேரில் தான் நடந்திருக்கும் என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

Trending News