எதிரிக்கு எதிரி நண்பன்.. தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா எனிமியிடம் காட்டும் நெருக்கம்

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கடந்த வருடம் தங்கள் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். மிகப்பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் பல விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அவர்களின் பிரிவுக்கான காரணங்களும் ஒவ்வொரு விதமாக பேசப்பட்டது.

இப்போதும் கூட அவர்களுடைய விவாகரத்து செய்தி பேசும் பொருளாக தான் இருக்கிறது. குழந்தைகளுக்காக அவர்கள் சேர போவதாக கூட பேசப்பட்டது. ஆனால் அப்படி ஒரு விஷயம் இனிமேல் நடக்கவே நடக்காது என்னும் வகையில் பல சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் தனுஷின் புது வீடு கிரகப்பிரவேசம்.

Also read: சார்பட்டா 2-வை ஓரங்கட்ட வரும் தனுஷ்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் வெற்றி கூட்டணி

போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக உருவாகும் வீட்டிற்கு தனுஷ் தன் குடும்பத்துடன் தான் அஸ்திவாரம் போட்டார். ஆனால் இடையில் ஏற்பட்ட பல மன வருத்தங்களின் காரணமாக தற்போது அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்திற்கு அவர் யாரையுமே அழைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஐஸ்வர்யா, அவரின் பிள்ளைகள், செல்வராகவன் உட்பட யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை.

எந்த ஆடம்பரமும் இல்லாமல் தனுஷ் தன் புது வீட்டிற்கு குடி பெயர்ந்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த பிரச்சினை ஓய்ந்துள்ள நிலையில் வேறு ஒரு சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதாவது தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது அவரின் அண்ணன் செல்வராகவனை அடிக்கடி சந்தித்து வருகிறாராம். ஏனென்றால் அவர் தற்போது லால் சலாம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Also read: தலைக்கு ஏரிய மம்மதை.. சூப்பர் ஹிட் கொடுத்த புகழ் போதையில் ஹெட் வெயிட் காட்டும் தனுஷ் பட இயக்குனர்

லைக்கா தயாரிக்கும் அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் கூட சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதனாலேயே அந்த படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐஸ்வர்யா எதற்காக செல்வராகவனை சந்திக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது அந்த திரைப்படம் சம்பந்தமான சில டிப்ஸ்களை கேட்பதற்காக தான் இந்த சந்திப்பு நடக்கிறதாம்.

இதன் மூலம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் நானே வருவேன் திரைப்படத்திலிருந்தே தனுஷுக்கும் அவருடைய அண்ணனுக்கும் சரியான பேச்சுவார்த்தை கிடையாது. அதை தெரிந்து கொண்ட ஐஸ்வர்யா தற்போது இந்த பிரச்சனையின் மூலம் குளிர் காய்கிறார் என்ற விமர்சனமும் இருந்துள்ளது. அந்த வகையில் இந்த விவகாரம் தற்போது கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: தனுஷுக்கு அதிர்ஷ்ட நாயகனாக மாறிய வாரிசு நடிகர் .. கூட்டணி போட்ட 3 படமும் சூப்பர் ஹிட்டுன்னா சும்மாவா