வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

திருமணத்திற்கு பின் கச்சிதமாக காய் நகர்த்திய ஜோதிகா.. மாதவனுடன் போடும் அதிரடி கூட்டணி

ஜோதிகா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். இவர் திருமணத்திற்கு பின் குடும்பம் குட்டியுமாய் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டார். அதன் பின் மறுபடியும் சினிமாவிற்கு ரீ என்டரி கொடுத்து பல படங்களில் நடித்து இவருடைய நிலையை தக்க வைத்துக் கொண்டார். அதற்கு ஏற்ற மாதிரி 36 வயதினிலே திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு கம்பேக் படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அண்ணன் தங்கைகளின் பாசத்தை வைத்து உடன் பிறப்பே என்ற படத்தில் நடித்தார். ஆனால் பழைய காதல், ரொமான்டிக் என்று இல்லாமல் நடிப்புக்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பிறகு தொடர்ந்து இதே மாதிரி நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழ் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக மலையாள படத்தில் நடித்துள்ளார்.

Also read: ஹீரோ, ஹீரோயின் இருவருமே இரட்டை வேடங்களில் நடித்த 5 படங்கள்.. ஜோடியாக நடித்த பேரழகன் சூர்யா, ஜோதிகா

இதன் பிறகு திரும்பி தமிழில் மறுபடியும் வருவார் என்று காத்திருந்த ரசிகர்களை தூக்கி எறிந்து விட்டு குடும்பத்துடன் மும்பைக்கு போய்விட்டார். அடுத்ததாக அங்கே சென்ற பிறகு அங்குள்ள படங்களில் நடிப்பதற்கு கமிட்டாய் இருக்கிறார். இவர் கடைசியாக 1998 ஆம் ஆண்டு வெளியான “டோலி சாஜா கே ரக்னா” என்ற இந்தி படத்தில் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பின் இந்தி திரை உலகிற்கு திரும்பி உள்ளார்.

அஜய் தேவகன் மற்றும் மாதவன் நடிக்கும் பாலிவுட் படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஜோதிகா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. அத்துடன் படப்பிடிப்பை லண்டன் மற்றும் மும்பை போன்ற பகுதியில் நடக்க இருக்கிறது. இப்படத்தை அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

Also read: திருமணத்திற்கு பின்னும் பிஸியாகி சுற்றி வரும் ஜோதிகா.. அக்கட தேசத்தில் அடித்த ஜாக்பாட்

மேலும் இப்பொழுது பழைய கிரேஸ் ஹீரோ உடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.
ஏற்கனவே மாதவனுடன் டும் டும் டும், பிரியமான தோழி போன்ற படங்களில் அவருக்கு ஜோடி போட்டு நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹிந்தி படத்தில் மாதனுடன் நடிக்கிறார். இவர் பாலிவுட்டில் முத்திரை பதிக்க வேண்டும் என்று மனதில் வைத்துக் கொண்டு தான் குடும்பத்துடன் அங்கு போய் குடித்தனம் செய்து வருகிறார்.

அத்துடன் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம். அங்கே ரீமேக் செய்வதால் அந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தான். மேலும் இதில் கேமியோ ரோலில் சூர்யா நடிக்க உள்ளார். இதனால் ஜோதிகா கச்சிதமாக காய் நகர்த்தி சூர்யாவையும் அங்கே இழுத்துக் கொண்டார்.

Also read: இசையால் கட்டி போட்ட சந்தோஷ் நாராயணனின் 6 மறக்க முடியாத படங்கள்.. தெறிக்க விட்ட கண்டா வரச்சொல்லுங்க

Trending News