திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காரியம் முடிந்ததும் கழட்டி விட்ட இயக்குனர், உதவிய உதயநிதி.. ஆஸ்கார் வாங்கியதும் நடு தெருவில் தவித்த பரிதாபம்

Udhayanidhi, Oscar Award: காலம் காலமாக சினிமாவில் விலங்குகளை வைத்து சில படங்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள உறவை உணர்வு பூர்வமாக காட்டும் படங்கள் ஏராளமாக வந்திருக்கிறது. அந்த வகையில் முக்கால்வாசி யானை, நாய், குரங்கு போன்ற விலங்குகள் அதிக படங்களில் காட்டப்பட்டிருக்கும்.

இதே மாதிரி கடந்த வருடம் தி எலிபன்ட் விஸ்பர் என்ற ஆவணத் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் பழங்குடி தம்பதிகளுக்கும், யானைக்கும் உள்ள உறவை மையமாக வைத்து இயக்குனர் கார்த்திகி இயக்கியிருக்கிறார். அதற்காக இந்த தம்பதியர்களை தொடர்பு கொண்டு எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அவர்களை நடிக்க சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

Also read: உதயநிதி, மாரி செல்வராஜ் எல்லாம் ஒன்றுமே இல்லை.. கொடி பறக்க செய்து ருத்ர தாண்டவம் ஆடிய வசூல் வேட்டை

அவர்கள் முதலில் யோசித்த நிலையில் படத்திற்கான முக்கியத்துவத்தையும் அதனால் ஒரு மாறுதல் கிடைக்கும் என்பதையும் சொல்லி அவர்களுடைய சம்மதத்தை பெற்றிருக்கிறார்கள். அத்துடன் இப்படத்தில் நடித்து முடித்துடன் உங்களுக்கு தேவையான அனைத்து பண உதவிகளையும் செய்து தருகிறேன் என்று சொல்லி நடிக்க வைத்திருக்கிறார்.

அவர்களும் நடிக்கும்போது அதிக அளவில் கஷ்டப்பட்டு பல காட்சிகளை நடித்துக் கொடுத்திருக்கிறார். அதற்கேற்ற மாதிரி அனைவரது கவனத்தையும் பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் இப்படம் ஆஸ்கார் விருதையும் பெற்றிருக்கிறது. அப்பொழுது விருது வாங்கும் நிகழ்ச்சிக்கு இந்த தம்பதிகளை இயக்குனர் அழைத்துச் சென்றிருக்கிறார்.

Also read: மாமன்னன் பட ஹீரோ உதயநிதியா, பகத் பாசிலா.? பாவம் மாரி செல்வராஜே கன்பியூஸ் ஆயிட்டாரு

பிறகு விருது வாங்கிக் கொண்டு திரும்பும் வழியில் பாதியிலேயே பணம் கொடுக்காமல் நடுரோட்டில் இறக்கி பரிதாபமாக அந்த தம்பதிகளை தவிக்க விட்டு சென்றிருக்கிறார். வீட்டுக்கு வருவது கூட பக்கத்தில் இருப்பவர்களிடம் காசை வாங்கிவிட்டு வீட்டிற்கு போய் இருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் இப்பொழுது வரை படத்தில் நடித்ததற்காக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை.

அதைப்பற்றி இவர்கள் கேட்டதற்கு நான் உங்கள் அக்கவுண்டில் போட்டு விட்டேன் நீங்கள் செலவு செய்து விட்டு என்னிடம் பொய் சொல்றீங்க என்று சொல்லி இருக்கிறார். இதற்காக வழக்கறிஞர் மூலம் வழக்குகளை தொடுத்து இருக்கிறார்கள். அதற்கும் அந்த இயக்குனர் போன் போட்டு இந்த தம்பதிகளை மிரட்டி இருக்கிறார். பிறகு இதெல்லாம் கேள்விப்பட்ட உதயநிதி இவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார்.

Also read: தியேட்டரில் டபுள் மடங்கு லாபம் பார்த்த மாமன்னன்.. வசூலுக்கு எண்டு கார்ட் போட்டு ஓடிடியில் ரிலீஸ் செய்த உதயநிதி

Trending News