திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இரண்டு வருஷத்துக்கு பின் எதிர்நீச்சலுக்கு விடிவு காலம்.. குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இதுவரை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த குணசேகரன் வீட்டு மருமகள்கள் எதிர்நீச்சல் போட தயாராகி விட்டார்கள். கிட்டத்தட்ட இரண்டு வருஷமாக இழுத்தடித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் தற்போது தான் முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது அடுப்பாங்கரை மட்டுமே பெண்களுக்கு சொந்தம் என்று ஆணாதிக்கம் பண்ணிய குணசேகரனின் கொட்டத்தை அடக்க விடிவு காலம் பிறந்தாச்சு.

அப்பத்தா உயிரோட தான் இருக்கிறார் என்பது உறுதியான விஷயம். இது ஜீவானந்தத்திற்கு மட்டுமே தற்போது தெரியும். ஆனால் இதை மறைத்து அப்பத்தா இறந்து போய்விட்டார். அதற்கு குணசேகரன் தான் காரணம் என்று மறுமகள்களை நம்ப வைத்து அவர்களின் கோபத்தை தூண்டி விட்டார். அதே மாதிரி பொறுத்தது போதும் இனி அடிமையாக இருக்கக் கூடாது என்று மருமகள்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள்.

அதுவும் அப்பத்தா ஆசைப்பட்ட மாதிரி நாம் அனைவரும் சாதித்துக் காட்ட வேண்டும். படித்த பெண்கள் இந்த மாதிரி முடங்கி விடக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக நாம் வளர்ந்து நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரன் வீட்டு பெண்கள் வாடி வாசலை தாண்டி திமிரும் காளையாக, சமையல் கட்டை தாண்டி ஒரு சாதனை தேரில் ஏறி இந்த உலகை ஆளப்போகிறார்கள்.

Also read: எதிர்நீச்சல் சீரியலை ஒன்னும் இல்லாமல் ஆக்கிய சிங்கப்பெண்.. ஒத்த ஆளாக நின்னு சிக்ஸர் அடிக்கும் ஆனந்தி

இந்த ஒரு தருணம் கண்டிப்பாக நிஜ வாழ்க்கையில் எங்கோ ஒரு மூலையில் இந்த மாதிரி அடங்கி கிடக்கும் பெண்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பெண்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகவும் இந்த கதை நகர்ந்து வருகிறது.

இந்த டிராக்கை இப்படியே விறுவிறுப்பாக கொண்டு போனால் டிஆர்பி ரேட்டிங்கை மறுபடியும் தக்க வைத்துக்கொள்ளலாம். அத்துடன் மக்கள் மறுபடியும் இந்த நாடகத்தை தூக்கி வைத்துக் கொண்டாடும் நிலைமைக்கு மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து இழப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மருமகள்கள் ஜெயிப்பதை பார்ப்பதற்கே ஆவலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுவும் யாருடைய தயவும் இல்லாமல் சொந்த காலில் நின்னு ஜெயித்து காட்டப் போகிறார்கள். இதுதான் குணசேகரனுக்கு விழும் முதல் அடியாக இருக்கப் போகிறது. இதனை தொடர்ந்து அவர் தோற்றுக் கொண்டே போகப் போகிறார். இவருடன் சேர்ந்து கதிரின் ஆணவம் அடங்க வேண்டும். ஆக மொத்தத்தில் தற்போது எதிர்நீச்சல் சீரியலுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது.

Also read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 இடத்தில் இருக்கும் சீரியல்கள்.. புத்தம் புது சீரியலால் பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்

Trending News