தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வலிமை படம் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இன்னும் வெளிநாட்டு செட்யூல் மட்டும்தான் பாக்கியாம். அதற்கும் விரைவில் படக்குழு ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்ப உள்ளதாம்.
இதற்கிடையில் தல அஜித் தன்னுடைய 61வது படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்தன. முதலில் தல 61 படத்தை சூரரைப்போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்க இருந்தாராம்.
அந்த வதந்தியை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் தல அஜித் தல 61 படத்திற்காக வலிமை பட இயக்குனர் வினோத்திடமே கதை கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் தற்போது தல 61 படத்தில் யாருமே எதிர்பார்க்காத டுவிஸ்ட் வைத்துள்ளார் தல அஜித்.
தனக்கு 14 வருடங்களுக்கு முன்பு தோல்வி படம் கொடுத்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளாராம் தல அஜித். அவர் வேறு யாரும் இல்லை, இயக்குனர் ஏ எல் விஜய் தான். எல் விஜய் மற்றும் அஜித் கூட்டணியில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது திரைப்படம்தான் கிரீடம்.
2007 ஆம் ஆண்டு வெளியான கிரீடம் படம்தான் ஏ எல் விஜய்க்கு இயக்குனராக முதல் படம். இந்நிலையில் சமீபத்தில் தல அஜித்தை விஜய் சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் தல அஜீத்துக்காக ஒன்லைன் ஸ்டோரி ஒன்றை சொல்லிவிட்டு வந்ததாகவும் கூறுகின்றனர்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக தல அஜித் ரசிகர்கள் ஏ எல் விஜய் படத்தை எதிர்பார்க்க மாட்டார்கள் என்றே நம்பலாம். காரணம் தல அஜித் தற்போது தான் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதுதான்.