வலிமை படத்தை நம்புனா வேலைக்கு ஆகாது.. அஜித் எடுத்த அதிரடி முடிவு, ஆடிப்போன போனி கபூர்

அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகி வந்த வலிமை படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை அடைந்தும் அதை முழுவதுமாக முடிப்பதற்கு ஒரு வழி கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது படக்குழு.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் வினோத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பி வலிமை எனும் படத்தில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் வலிமை படம் படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் எப்போது முடியும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் என்பது போல விட்டுவிட்டார்கள்.

அந்த அளவுக்கு வலிமை படம் அனைவரையும் படுத்தி எடுக்கிறது. வெளிநாட்டு அனுமதி கிடைக்காமல் கிளைமாக்ஸ் காட்சியை முடிக்க முடியவில்லை என வினோத் படக்குழுவினருடன் கூறி வருத்தப்பட்டிருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட அஜித் தற்போதைக்கு வலிமை படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதை விட அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பிக்கலாம் என தன்னுடைய தல 61 படத்தையும் வினோத்துக்கு தூக்கி கொடுத்து விட்டாராம்.

ஏற்கனவே தல அஜித்திடம் ஒரு வரி கதையை கூறி வைத்திருந்த வினோத் தற்போது அந்த கதையை முழுமையாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறாராம். மேலும் வலிமை பட ரிலீஸுக்கு முன்னரே தல 61 படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம் என அஜீத் பச்சைக்கொடி காட்டி விட்டாராம்.

அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் தல 61 படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக பிரபல பத்திரிகை ஒன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த முறை தயாரிப்பாளர் போனி கபூர் இல்லை என்பது போன்றவை செய்திகள் கிடைத்துள்ளன.

அதற்கு காரணம் ஏற்கனவே தல 61 படத்தின் கால்சீட்டை கோபுரம் பிலிம்ஸ் வாங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியானது. இப்போதைக்கு தல 61 படம் ஜூலை மாதம் ஆரம்பமாகிறது என்பது மட்டும் உறுதி. ஆனால் தயாரிப்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளார்களாம்.

thala61-cinemapettai
thala61-cinemapettai