வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வணங்கானுக்கு கொடுத்த டாட்டா, வாடிவாசல் இழுப்பறி.. இப்போது சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்திற்கு தயாராகும் சூர்யா

ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு பின் கோலிவுட்டில் கொஞ்சம் அகம்பாவத்தோடு சுற்றிக் கொண்டிருக்கும் சூர்யா, பாலாவின் வணங்கான் படத்திற்கு டாட்டா காட்டிவிட்டார். அதன் பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் படமும் 2 வருட கால அவகாசத்தில் தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சூர்யா சிறுத்தை சிவாவின் வரலாற்று கதையம்சம் கொண்ட வீர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது சூர்யாவிற்கு எந்தப் படமும் செட் ஆகவில்லை. இந்நிலையில் பல இயக்குனர் ஒருவர் சூர்யாவை தேடி சென்று இருக்கிறார் அவரும் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்.

Also Read: 4 திருப்புமுனை இயக்குனர்களை கழட்டிவிட்ட சூர்யா.. வணங்கானைத் தொடர்ந்து வாடிவாசலுக்கு கொடுத்த டிமிக்கி

அதுவும் பிடிக்காத சூர்யா இப்பொழுது அந்த இயக்குனரின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ன ஒரு ஐடியா கொடுத்துள்ளார். இதற்காக கௌதம் வாசுதேவ் மேனன் புதிதாக படத்தை எடுக்கலாம் என்று அதற்கான கதையையும் சொல்லி இருக்கிறார்.

ஆனால் அதுவும் பிடிக்காததால் சூர்யா காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று குட் நியூஸ் சொல்லியிருக்கிறார். கௌதம் மேனனும் தாணுவிடம் பேசிவிட்டார் இப்பொழுது மூன்று பேருக்கும் ஓகே தான். விரைவில் வருகிறது காக்க காக்க 2.

Also Read: சூர்யாவின் 42 வது படத்தின் தலைப்பு.. வெற்றியை உறுதி செய்த சிறுத்தை சிவா

மேலும் 2003 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய படம் தான் காக்க காக்க. இந்த படத்தின் மூலம் ஒரு போலீஸ் எப்படி இருக்க வேண்டும் என சூர்யா அதில் வாழ்ந்து காட்டி இருப்பார். இப்போது வரை ரசிகர்களின் ஃபேவரிட் படமாக இருக்கிறது. இந்நிலையில் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் தற்போது வெளி வருவதால் அதைக் கேட்கும் ரசிகர்களும் குதூகலத்தில் உள்ளனர்.

மேலும் இரண்டாம் பாகத்திலும் சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் பலரும் விருப்பம் தெரிவிக்கின்றனர். அத்துடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யா கௌதம் வாசுதேவ் மேனன் கலைப்புலி தாணு போன்ற மும்மூர்த்திகளும் இணைவதால் இந்த படத்தைக் குறித்து எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

Also Read: ரிலீஸுக்கு முன்பே பல நூறு கோடி பிசினஸ் செய்த 6 படங்கள்.. மலைக்க வைத்த சூர்யாவின் 42வது படம்

Trending News