இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகக்குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களை தொடர்ந்து அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. துணிவு படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதுமட்டுமின்றி இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் லைக்கா தயாரிப்பதாக கூறப்பட்டது. இதனால் விக்னேஷ் சிவன் உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்தார். ஏனென்றால் அவர் வாழ்நாளில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை.
Also Read : உக்காந்த எடத்துல இருந்தே கள்ளா கட்டியுள்ள தளபதி 67… வசூலை கேட்டு ஆடிப்போன அஜித் வட்டாரம்
ஆகையால் இந்தப் படத்திற்கான கதையை விக்னேஷ் சிவன் செதுக்கி வந்தார். ஆனால் இப்போது ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டதாக ஒரு தகவல் வந்த வண்ணம் உள்ளது. இப்போது லைக்கா இந்த படத்திற்காக வேறு ஒரு இயக்குனரை தேடி வருகிறதாம். இதில் மகிழ்த்திருமேனி, விஷ்ணுவர்தன் போன்ற இயக்குனர்களில் ஒருவர் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.
இவ்வாறு ஒரு டாப் நடிகரின் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டுள்ளதால் அவரது கேரியரே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஏனென்றால் அஜித் படத்தின் வாய்ப்பு பறிபோனதால் அடுத்த நடிகர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Also Read : அஜித் பிரம்மாண்டத்தின் உச்சம் தொட வரிசை கட்டி நிற்கும் 3 இயக்குனர்கள்.. எதிர்பார்ப்பை எகிற செய்த ஏகே 63
இவ்வாறு அஜித் விக்னேஷ் சிவனுக்கு ஆசை காட்டி மோசம் செய்து உள்ளதாக இணையத்தில் விக்னேஷ் சிவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள். அஜித் எப்போதுமே ஒரு விஷயத்தில் இருந்து பின் வாங்க மாட்டார் என்பது அவரது ரசிகர்களின் நிலைப்பாடு.
ஆனால் இப்போது ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றபட்ட நிலையில் அஜித் மௌனம் சாதித்து வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இப்போது அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்து விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Also Read : விக்னேஷ் சிவனை டீலில் விட்ட அஜித்.. உதயநிதி இயக்குனருடன் கைகோர்க்கும் ஏகே-62 காம்போ