புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விக்ரம் வெற்றிக்குப் பின் இன்னும் ஸ்பீடை ஏத்திய ஆண்டவர்.. ஒரே நேரத்தில் உருவாகும் 2 படங்கள்

Actor Kamla: கடைசியாக உலக நாயகன் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்தார். அந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை பார்த்தபின் அதே ஸ்பீடில், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை நடிக்க தயாராகிவிட்டார்.

எங்கடா மக்களவை தேர்தல் வேற வருது, இதுக்கப்புறம் கமலஹாசன பிடிக்க முடியாது என உலகநாயகனின் படத்தில் கமிட்டான இரண்டு இயக்குனர்கள் கலக்கத்தில் இருந்தனர். ஆனால் அந்த ரெண்டு  இயக்குனர்களின் படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க முடிவெடுத்து, அடுத்த வெற்றிக்கு ஆண்டவர் தயாராகிவிட்டார்.

கமலஹாசன் ஏற்கனவே ஹெச் வினோத் மற்றும் மணிரத்தினம் இருவரின் படங்களில் கமிட்டானார். ஆனால் இந்த படம் எப்போது  துவங்கும் என்பதற்கான அறிவிப்பு இதுவரை உறுதியாக வெளியாகவில்லை. அது மட்டுமல்ல வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கமலஹாசன் தீவிரமாக இறங்க இருப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் அவர் பிரச்சாரம் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

இதற்கிடையில் இந்த ரெண்டு  இயக்குனர்களின் படங்களுக்கும் கம்பி நீட்டி விடுவார் என்று நினைத்தனர். ஆனால் சொன்ன வாக்கை காப்பாற்றுபவர் தான் ஆண்டவர்! என்பதை மீண்டும் ஒருமுறை கமல் நிரூபித்து விட்டார். அக்டோபர் 21ம் தேதியான இன்று மணிரத்தினம் படத்தின் படப்பிடிப்பு சைலன்டாக துவங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே பட குழு செய்து வைத்ததால் கமல் சொன்ன அடுத்த நிமிடமே படப்பிடிப்பை துவங்கிவிட்டனர். இந்த படம் மட்டுமல்ல ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தையும் உலக நாயகனின் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி துவங்கப் போகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.

இரண்டு படங்களையும் ஒரே சமயத்தில் நடித்து முடிக்க வேண்டும்  என்பதுதான் கமலின் திட்டம். இந்த ரெண்டு படங்களையும் முடித்த பிறகு தான் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளார்.

Trending News