ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மீண்டும் 7 அதிசயங்களை கையில் எடுத்த ஷங்கர்.. ராம்சரணுக்காக இந்த முறை காட்டும் வித்தியாசம்

எப்பொழுதுமே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் படங்கள் எடுப்பதில் ஷங்கரை
மிஞ்சஆள் இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை. முதல் முதலாக தமிழ் சினிமாவில் உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களை திரையில் காட்டி மக்களை ஆச்சரியப்பட வைத்தவரும் இவரே.

ஜீன்ஸ் படத்தில் “கல் தோன்றி” பாடலில் உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களையும் இவர் காட்டி இருப்பார். அப்பொழுதே பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சங்கர் படங்கள் என்றாலே குறைந்தது 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும்.

சிவாஜி, இந்திரன், 2.0 என எப்பொழுதுமே இவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஹை பட்ஜெட் படங்களாகத்தான் இருக்கும். இப்பொழுது ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது.

ராம்சரணுக்காக இந்த முறை காட்டும் வித்தியாசம்

400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது கேம் சேஞ்சர் படம். அதற்குள் இந்த படத்திற்கு 200 கோடிக்கு மேல் பிசினஸ் நடந்துள்ளது. எப்படி ஜீன்ஸ் படத்தில் ஏழு அதிசயங்களை காட்டினாரோ அதேபோல் இந்த படத்திலும் ஷங்கர் 7 மாநிலத்தையும் பெருமைப்படுத்தும் பிரத்தியேகமான இசையை இதில் புகுத்தியுள்ளாராம்.

எடுத்துக்காட்டாக கேரளாவில் செண்டை மேளம், இப்படி ஏழு மாநிலத்திற்கும் உள்ள பேமஸான இசையை போட்டு ஒரு பாடலை கேம் சேஞ்சர் படத்திற்காக உருவாக்கி இருக்கிறாராம். அப்பேற்பட்ட ஒரு பாடல் இன்று செகண்ட் சிங்கிளாக வெளிவர இருக்கிறது.

Trending News