சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மறுபடியும் முதலில் இருந்தா, கோபியை பாக்யா வீட்டிற்கு கூட்டிட்டு வந்த ஈஸ்வரி.. பின்னாடியே வரப்போகும் ராதிகா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், மனசாட்சியே இல்லாமல் ஓவராக ஆடும் ஈஸ்வரி, தான் நினைச்சதை சாதிக்க வேண்டும் என்பதற்காக ராதிகாவை நோகடித்து கோபி மனசை மாற்றி பாக்கியா வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார். இதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் பாக்கியா வேடிக்கை பார்க்கிறார். என்ன நடக்குது என்று புரியாமல் ராதிகா குழப்பத்தில் இருக்கிறார்.

உடனே பாக்யாவை பார்த்து உங்களுக்கு இப்பொழுது சந்தோஷமா? நீங்க நினைச்சபடி கோபி உங்களுடைய வீட்டுக்கு வரப் போகிறார். உங்க மனசுல கோபி உங்க கூட வீட்டுக்கு வரணும்னு நினைப்பு இருக்கிறது. அதுதான் இப்பொழுது செய்து காட்டி இருக்கிறீர்கள் என்று பாக்யாவிடம் கோபமாக ராதிகா பேசிவிட்டார். அதற்கு பாக்கியா அவர் வருவதனால் எனக்கு என்ன சந்தோஷம்.

எல்லாமே என் கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. எனக்கே என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறேன், நீங்க வேற தேவையில்லாமல் பேசி என்னை மேலும் நோகடிக்காதீங்க என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு கோபியை கூட்டிட்டு வந்த ஈஸ்வரி, இனியா மற்றும் செழியன் வாசலில் நின்று ஜெனியை ஆரத்தி எடுக்க சொல்கிறார்.

அதற்கு ஜெனி எனக்கு ஆரத்தி எல்லாம் எடுக்கத் தெரியாது என்று கோபப்பட்டு உள்ளே போய் விடுகிறார். பிறகு செல்வியும் எடுக்க மனசு இல்லாமல் புலம்பிய நிலையில் ஈஸ்வரி யாரும் ஒன்னும் பண்ண வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன் என்று உள்ளே சென்று ஆரத்தி தட்டை கரைத்து வந்து கோபியை உள்ளே கூட்டிட்டு போய்விடுகிறார்.

பிறகு பாக்கியா வீட்டிற்கு வந்ததும் கோபிக்கு உப்பு உரப்பு இல்லாமல் சமைச்சு கொடுக்க வேண்டும் என்று ஈஸ்வரி ஆர்டர் போடுகிறார். அதற்கு பாக்கியா இன்னும் என்னெல்லாம் பண்ணனும் என்று உங்களிடமும் உங்க மகனிடமும் கேட்கணுமா என்று கேட்கிறார்? என்ன பாக்கியா இப்படி பேசுகிறாய் என்று ஈஸ்வரி கேட்ட நிலையில் உங்களுக்கு தேவை என்றால் நீங்க உங்க பையன பார்த்துக்கோங்க.

என்னை இது பண்ணு அது பண்ணு என்று வேலை வாங்குவதும் கூடாது, வீட்டுக்கு நடுவில் வந்து குடும்ப விஷயத்தில் பஞ்சாயத்து பண்ணி மூக்கு நுழைக்கவும் கூடாது என்று சில கண்டிஷன்களை போட்டு போய்விட்டார். ஆனாலும் எதற்கும் ஆசராத ஈஸ்வரி, என் பையனுக்கு தேவையானது நானே சமைத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.

கோபியை கூட்டிட்டு ராதிகா வீட்டிற்கு வந்து விடுவார் என்று ராதிகாவின் அம்மா மற்றும் மயு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வீட்டுக்கு வந்த ராதிகா, கோபி என்னுடன் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவங்க அம்மா கூப்பிட்டதும் பாக்யா வீட்டுக்கு போய்விட்டார் என்று கவலைப்பட்டு சொல்கிறார். உடனே இதை இப்படியே விட்டு விடக்கூடாது என்று பாக்கியா வீட்டில் சண்டை போடுவதற்கு ராதிகாவின் அம்மா கிளம்பி விட்டார்.

அத்துடன் சோகமாக இருக்கும் ராதிகாவை பார்த்து மயு, டாடி வீட்டுக்கு வருவார் என்று ரொம்பவே ஆவலாக இருந்தேன். இனி வரமாட்டாரா என்று கேட்கிறார். நீ என்னுடன் எப்பொழுதும் கடைசி வரை இருப்பதான என்று ராதிகா, மகளை பார்த்து கேட்கிறார். அதற்கு மயூ நான் இருப்பேன் என்று சொல்லி ராதிகாவை ஆறுதல் படுத்துகிறார்.

அடுத்ததாக பாக்யாவிடம் ராதிகாவின் அம்மா சண்டை போடுகிறார். ஆனால் பாக்கியா எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீங்க எது வேண்டுமானாலும் எங்க அத்தையிடம் போய் கேட்டுக்கோங்க என்று சொல்லி விடுகிறார். ஆனால் எவ்வளவு பட்டும் திருந்தாத கோபி இப்பொழுது கூட எடுத்த முடிவு தவறாக தான் இருக்கிறது. இந்த ஈஸ்வரியும் திருந்துவதாக தெரியவில்லை.

கடைசியில் ராதிகாவும் வேற வழி இல்லாமல் பாக்கியாவின் வீட்டிற்கு பெட்டி படுக்கையை எடுத்து விட்டு வந்து விடுவார். மறுபடியும் முதலில் இருந்தா என்பதற்கு ஏற்ப பாக்கியா வீட்டில் இருந்து எல்லோரும் பிரச்சினை பண்ண போகிறார்கள்.

Trending News