செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

மீண்டும் சர்ச்சையான சம்பவத்தை கையில் எடுத்த சூர்யா.. நீங்க இறங்கி பண்ணுங்க ப்ரோ

கடந்த சில நாட்களாகவே கட்டுக்கடங்காத காட்டுத் தீ போல மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது ஜெய் பீம் பட விவகாரம் தான். இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த 2ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான படம் தான் ஜெய் பீம். இப்படம் வெளியான அன்று தொடங்கிய பஞ்சாயத்து தற்போது வரை முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்த 1995ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததாக கூறி ஒரு தரப்பினர் சூர்யாவிற்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கினார்கள். அந்த பிரச்சனை முடிவதற்குள்ளாகவே படத்தில் பணியாற்றிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன் தன்னை ஏமாற்றி வசனங்கள் எழுத வைத்ததாக புகார் கூறினார்.

மேலும் என்னிடம் கூறும்போது எலி வேட்டை என்ற தலைப்பை தான் கூறினார்கள் அதன் பின்னர் ஜெய் பீம் என மாற்றி விட்டார்கள். என்னை ஏமாற்றி தான் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட ஒரு படத்தில் பணியாற்ற வைத்து விட்டார்கள் என குற்றம் சாட்டியதோடு ஜெய் பீம் படக்குழுவினர் ஊதியமாக அளித்த 50,000 ரூபாயையும் திருப்பி அளித்தார்.

இப்படி நாளுக்கு நாள் ஏதேனும் ஒரு பிரச்சனை உருவாகி வருகிறதே தவிர பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாடில்லை. இந்த பஞ்சாயத்தை முடிக்கும் விதமாக இயக்குனர் ஞானவேல் இதற்கு முழுக்க முழுக்க நான் தான் பொறுப்பு சூர்யாவை ஏன் டார்ச்சர் செய்கிறீர்கள் என விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் சூர்யா அடுத்த பிரச்சனைக்கு தயாராகி விட்டார்.

ஆமாங்க சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒரு உண்மை சம்பவத்தை படமாக எடுத்துவிட்டு மனுஷன் படாத பாடு பட்டு வருகிறார். இதில் அடுத்த பிரச்சனையா என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் சோசியல் மீடியாக்களில் சூர்யாவிற்கு ஆதரவாகவே மீம்கள் வருகிறது. இது நம்ம களம் பார்த்துக்கலாம் நீங்க இறங்கி பண்ணுங்க என்பது போல் தொடர்ந்து ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மீண்டும் ஒரு பிரச்சனை வராமல் இருந்தா சரிதான்

Trending News