புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சூர்யா உரண்ட இழுத்த அடுத்த இயக்குனர்.. பொழுதுபோச்ச எதுவும் நடக்கலைன்னு பார்த்தா வந்த புதுச்சண்டை

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சுற்றி வருகிறார் சூர்யா. சமீபத்தில் அவரைச் சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள். வணங்கான் பாலா படத்தில் ஆரம்பித்த சண்டை நீண்டு கொண்டே போகிறது. ஏற்கனவே பாலாக்கு முன் அவர் இயக்குனர் அமீர், கௌதம் வாசுதேவ் மேனன் என பல பேருடன் உரசல் ஏற்பட்டு இப்போது வரை மனக்கசப்பில் இருக்கிறார்.

சமீபத்தில் சுதா கொங்காராவுடன் பிரச்சனை. இதனால் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டிய புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படி எல்லாரிடமும் உரண்ட இழுத்த சூர்யா தற்போது புதிதாய் இயக்குனர் ஒருவருடனும் பிரச்சனை செய்து வருகிறாராம்.

சூர்யா 44 இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். படம் அந்தமானில் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தில் வில்லனாக கமிட்டாகி இருந்தார் உரியடி பட இயக்குனர் மற்றும் நடிகர் விஜயகுமார். கார்த்திக் சுப்புராஜுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயகுமார் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.

எதுவும் நடக்கலைன்னு பார்த்தா வந்த புதுச்சண்டை

இப்பொழுது கார்த்திக் சுப்புராஜுடன், சூர்யாவிற்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாம். இருவரும் படப்பிடிப்பு தளங்களில் பேசிக் கொள்வதே இல்லையாம். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்திற்காக சூர்யா கொடுத்த கால்ஷீட்டை விட அதிக நாட்கள் கேட்கிறாராம்.

மேலும் ஷூட்டிங் நடைபெறும் அந்தமானில் ஒரே பாம்புகள் தொல்லையாம். எங்கே பார்த்தாலும் கூட்டம் கூட்டமாய் பாம்புகள் தான் இருக்கிறதாம். இதனால் 40 நாட்கள் அந்தமான் செடியுலை கேன்சல் செய்துவிட்டு சென்னை திரும்பி விட்டனர். இப்படி சரியாக பிளான் பண்ணாமல் கார்த்திக் சுப்புராஜ் அலைக்கழிப்பதாக சூர்யா நினைக்கிறார்.

Trending News