திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

வயசானாலும் சுண்டி இழுக்கும் 6 அழகு ஆன்ட்டிஸ்.. இப்பவும் ஜோதிகாவை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்

Heroines: பொதுவாக திரையுலகில் ஹீரோயின்கள் எல்லாம் 5 முதல் 8 வருடத்திற்குள்ளேயே மார்க்கெட் காலியாகி விடுவர்கள். ஆனால் தற்போதும் சிலர் வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும், இன்னும் உன்னை விட்டு போகவில்லை என்று போல இன்னுமும் சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகின்றன. அவர்களின் அழகினால் இப்போதும் ரசிகர்கள் சொக்கி தான் இருக்கின்றனர். அப்படிப்பட்ட சில ஹீரோயின்ஸ்கள் யார் என்று பார்க்கலாம்.

மஞ்சு வாரியார்: இந்த வரிசையில் முதலாவதாக வருபவர் மஞ்சு வாரியர். பெரும்பாலும் மலையாள திரைப்படங்கள் நடித்துக் கொண்டிருப்பவர். இவருக்கு 45 வயது ஆகிறது. அசுரன் திரைப்படத்தில் தனுஷ் உடன் நடித்த போது ரசிகர்கள் இவர் மேல் ஒரு கண்ணை வைத்து விட்டனர். பிறகு ஹ வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் கண்மணி ஆக மாஸ் என்ட்ரி கட்டி விட்டார்.

Also Read:கௌதமி மகளுக்கு வந்த கொலை மிரட்டல்.. 25 கோடியை ஆட்டையை போட்ட கும்பல்

ரம்யா கிருஷ்ணன்: படையப்பா படத்தில் நீலாம்பரியாக திரையுலகையே அதிர வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு தற்போது 52 வயது ஆகிறது, இவர் சொன்ன வரியே வயசானாலும் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போல, அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ இவங்களுக்கே பொருந்தும். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி போன்ற 5 மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்து பயங்கர பேமஸான பாகுபலிலும் தனது அழகில் ரசிகர்களை கட்டி போடு வைத்து அதிகம் செய்தார் சிவகாமியாக.

நதியா: பூவே பூச்சூடவா என்னும் திரைப்படத்தில் 1985ல் தமிழ் சினிமாவக்கு அறிமுகமானவர்தான் நதியா. அதில் தொடங்கி 2023 இல் வெளியான லேடீஸ் கெட் மாற்றித் திரைப்படம் வரை நடித்துக் கொண்டிதான் இக்கிறார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 56 வயது ஆகிறது.

Also Read:ஜெயித்தால் ஒரு பேச்சு, தோத்த ஒரு பேச்சு.. பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்காமல் வாய்விட்டு சீரழியும் சோயப் அக்தர்

ஜோதிகா: வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ஜோதிகா. தற்போது இவருக்கு 44 வயது ஆகிறது. எக்கச்சக்க தமிழ் திரைப்படங்கள் நடித்துள்ளார். கெரியரில் பிக்கில் இருக்கும் போது நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு பெரிதாக எதிலும் நடிக்கவில்லை. கொஞ்சம் காலங்களுக்குப் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரி என்ட்ரி கொடுத்தார். என்னதான் வயசாகி இருந்தாலும் இன்னும் இவருக்கு மவுஸ் குறையவில்லை.

சினேகா: என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சினேகா. இவருக்கு 41 வயது ஆகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ள. 2000-களின் தொடக்கங்களிலிருந்து இவர் இளைஞர்களின் கனவு கன்னியாகவே இருந்தவர். தனுஷ் உடன் வெளியான பட்டாசு திரைப்படத்தின் ரீ என்ட்ரி கொடுத்ததும், ரசிகர்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Also Read:ஒட்டுமொத்த ஈகோவால் நாசமாய் போகும் நடிகர் சங்கம்.. விஷால் போட்ட தப்பு கணக்கு

திவ்யதர்ஷினி: விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான டிடியும் இந்த லிஸ்டில் இடம்பெறுவர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் கமலஹாசனின் நல தமயந்தி படத்தில் ஒரு துணை நடியாக அறிமுகம் ஆனார். என்னதான் இவர் நடித்த திரைப்படங்கள் இவருக்கு வெற்றியை தரவில்லை என்றாலும், விஜய் டிவியில் தொகுப்பாளர் பல நிகழ்ச்சியையும் தொகுத்துள்ளார். இவருக்கு 38 வயது ஆகிறது. இருப்பினும் இவருக்கு ரசிகர்களிடையே வெயிட்டேஜ் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது.

Trending News