சந்தானம் காமெடி நடிகராக இருந்த வரைக்கும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. யாருடைய பேச்சையோ கேட்டுக்கொண்டு நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற அடம் பிடித்து ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் போகவில்லை.
சமீபகாலமாக காமெடி கலந்த படங்களில் நடித்து வந்த சந்தானம் முழுவதுமாக காமெடியை தவிர்த்து விட்டு ஆக்சன் ஹீரோவாக மாற முற்பட்டுள்ளார். இதன் விளைவாக சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான குலுகுலு படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவையை தவிர்த்து இருந்தார்.
Also Read : ஒருவாட்டி அடிபட்டும் திருந்தாத சந்தானம்.. ஏஜென்ட் கண்ணாயிரம் வெற்றி பெறுமா?
இந்த படம் படுமோசமான தோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படம் தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் சீனிவாசா என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, முனிஷ்காந்த், குக் வித் கோமாளி புகழ் என்று ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் நடித்திருந்தாலும் இந்த படத்தில் சுத்தமாக காமெடி காட்சிகளை இடம்பெறவில்லையாம். அப்படி காமெடி காட்சிகள் வந்தாலும் அதை இயக்குனர் தவிர்த்து உள்ளார்.
Also Read : சமீபத்தில் சந்தானம் ரசிகர்களை நோகடித்த 5 படங்கள்.. தியேட்டரில் தலைதெறிக்க ஓட வைத்த குலுகுலு
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் இசை அமைத்து உள்ளதால் பின்னணி இசை நன்றாக இருந்ததாகவும் ஒரே ஒரு பாடல் தான் இப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சந்தானத்தின் காமெடியும் இந்த படத்தில் இடம்பெறாததால் படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.
மேலும், ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டிக்கெட் செலவிற்கு ஒரு சாப்பாடு வாங்கி சாப்பிட்டு இருக்கலாம் என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். இவ்வாறு சந்தானம் காமெடியை கைவிட்டதால் அடுத்தடுத்த தோல்வியால் சிக்கி தவித்து வருகிறார்.
Also Read : வடிவேலு, சந்தானம் எடுத்த பிரேக்.. அதிர்ஷ்ட மழையில் நனையும் ஒரே காமெடி நடிகர்