பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் வெளியாகி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த படம் இந்தியன். இதில் கமல் இரட்டை வேடத்தில்நடித்து அசத்தியிருப்பார். கமலுக்கு ஜோடியாக சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது 24 வருடத்திற்குப் பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது.
கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியன் 2 படம் ஆரம்பித்ததில் இருந்தே பல தடங்கல் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை ஏஆர் ரகுமான் இசையமைத்த இதைத்தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் அனிருத்துடன் ஷங்கர் கைகோர்த்துள்ளார்.
கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்டது. விபத்திற்குப் பின் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்ட இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாராகி வந்தார்.
லைக்கா மற்றும் சங்கர் இருவருக்கும் ஏதோ மன சங்கடம் இருந்து வந்துள்ளது. இதனுள் கமலும் சேர்ந்து கொண்டார். அவர் பங்கிற்கு அவரும் ஏதோ குழப்ப இந்த படம் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. இப்போது கமலின் விக்ரம் படம் கொடுத்த நம்பிக்கையால், உதய நிதி அவர்களை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்.
கிட்டத்தட்ட பஞ்சாயத்தை முடிவுக்கும் கொண்டு வந்துவிட்டார். இப்பொழுது இந்தப் படம் கூடிய விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த படத்தை கையால மனரீதியா நான்கு பேரும் தயாராகிவிட்டனர். சங்கர், லைக்கா, கமல், உதயநிதி நான்கு பேரும் இந்த படத்திற்கான வேலையில் இறங்கி விட்டார்கள்.
இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கூட கலைஞர் டிவி வாங்க இருக்கிறதாம். எது எப்படியோ இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் துவங்க படுவதற்கான சாத்தியக்கூறு கடந்த சில நாட்களாக நிலவி வரும் நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து கமலஹாசன் இந்தியன் 2ல் வேற லெ-வலில் மிரட்ட தயாராகிக் கொண்டிருக்கிறார்.