செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ஓவர் பந்தா காட்டும் கமல் மகள் அக்ஷரா ஹாசன்.. கடுப்பான இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்

உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் விக்ரமின் கடாரம் கொண்டான், அஜித்தின் விவேகம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து நடித்து வரும் அக்னிச் சிறகுகள் என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் உலகில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தன. முன்னதாக அக்ஷராஹாசன் கேரக்டரில் நடிக்க பிரபல தெலுங்கு நடிகை ஷாலினி பாண்டே தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவர் ஓவராக பந்தா செய்வதும் குறித்த தேதியில் படப்பிடிப்புக்கு வராமல் சேட்டை செய்வதுமாக இருந்ததால் கடுப்பான படக்குழு அவரை நீக்கி அக்ஷரா ஹாசனை உள்ளே எடுத்து வந்தது.

அதன் பிறகுதான் இதற்கு சாலினி பாண்டேவை பரவாயில்லை எனும் அளவுக்கு யோசித்திருக்கிறார்கள் படக்குழுவினர். அக்ஷரா ஹாசனின் சேட்டைகள் தாங்க முடியவில்லையாம். மேலும் அக்னிச் சிறகுகள் படக்குழுவை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி விட்டாராம்.

ஏற்கனவே அந்த படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக படப்பிடிப்பு நடத்தி ஒரு வழியாக இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் மேலும் அக்ஷர ஹாசன் குடைச்சல் கொடுத்ததால் படத்தின் தயாரிப்பாளரான டி சிவா செம கடுப்பில் இருக்கிறாராம்.

agni-siragugal-cinemapettai
agni-siragugal-cinemapettai

Trending News