மூடர்கூடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நவீன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அலாவுதீனும் அற்புத கேமராவும் என்ற படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. எனவே தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கியுள்ள நவீன் அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் அக்ஷராஹாசன், நாசர், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ரஷ்யாவில் இதன் படப்பிடிப்பு நடந்த போது, சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.
சண்டை காட்சியின் போது நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை இயக்குனர் நவீன் பகிர்ந்துள்ளார். அதாவது இந்த சண்டைக்காட்சியை ரஷ்யாவை சேர்ந்த ஸ்டண்ட் கோஆர்டினேட்டர் விக்டர் இவானோவ் அமைத்துள்ளார். இவர் ஹாலிவுட்டின் பல படங்களுக்கு ஸ்டண்ட் காட்சிகள் அமைத்தவர்.
அக்னி சிறகுகள் சண்டை காட்சியின் போது அருண் விஜய் அவருக்கு முன் தனக்கு தெரிந்த வித்தைகளை செய்து காட்டியிருக்கிறார். அப்போது அருண் விஜயின் அந்தர்பல்டியில் அசந்து போன விக்டர் இவானோவ், உனக்கு ரிகர்சல் தேவையில்லை, நேரா ஷாட்டுக்கே போகலாம் என கூறியுள்ளார்.
அக்னி சிறகுகள் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைகிற நிலையில் நவீன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சில தினங்கள் முன்பு விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அக்னி சிறகுகளின் செகண்ட் லுக்கை வெளியிட்டனர். ஆக்சன் த்ரில்லர் படமான அக்னி சிறகுகள் விரைவில் வெளியாக உள்ளது.
