சனிக்கிழமை, மார்ச் 15, 2025

டிராகன் பிரதீப்பை அசிங்கமா திட்டிய ரசிகை.. AGS கொடுத்த பிரஷரால் நீக்கப்பட்ட வீடியோ

Dragon-AGS: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் தான் டிராகன். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதற்கான பிரமோஷன் வேலைகள் கடந்த சில நாட்களாகவே ஜோராக நடந்து வருகிறது. அதே போல் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு சிலருக்கு இந்த ட்ரெய்லர் பிடித்திருந்தாலும் சிலர் இதை விமர்சித்தும் வருகின்றனர். அப்படித்தான் ஒரு ரசிகை பிரதீப்பை திட்டி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

AGS கொடுத்த பிரஷரால் நீக்கப்பட்ட வீடியோ

நல்லா படிச்சு பட்டம் வாங்குனவங்களுக்கே இங்க வேலை கிடைக்க மாட்டேங்குது. இதுல டிராகன் படத்துல 48 அரியர் வச்ச பிரதீப் சொல்றத கேட்காதீங்க.

இதுதான் சமூகத்தை சீரழிக்கும் படம். இதையெல்லாம் பார்த்து உருப்படலாம்னு நினைக்காதீங்க. ஒழுங்கா படிங்க என அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

அந்த வீடியோ அனைத்து மீடியாக்களிலும் வெளியாகி இருந்தது. அது மட்டும் இன்றி வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது.

ஆனால் ஏஜிஎஸ் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பயங்கர அழுத்தம் காரணமாக தற்போது அனைத்து மீடியாக்களும் அந்த வீடியோவை நீக்கிவிட்டது. விமர்சனத்தை எதிர்கொள்ள பயமா.?

Trending News