ஒரே படத்தால் மொத்த இளசுகளையும் கைக்குள் வைத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் இன்று நடித்து முடித்திருக்கும் இரண்டாவது படத்திலும் பட்டையை கிளப்பியுள்ளார்.இவர் நடிப்பில் அடுத்து “எல் ஐ கே” படமும் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
ஏஜிஎஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய படம் டிராகன். இந்த படம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளியாகி ஏகபோக ஹிட் அடித்து விட்டது. இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிரி உள்ளது. அதற்குள் இந்த படத்தின் வியாபாரமும் பிச்சிக்கிட்டு போகிறது.
காலேஜ் பசங்க, 90ஸ் கிட்ஸ் என மொத்த பேரையும் குறிவைத்து இந்த படத்தில் ஏகப்பட்ட வசனங்கள் இருக்கிறது. காதல் பிரேக் அப், காமெடி, கலாட்டா என ஒரு மசாலா படமாக டிரைலரில் காட்டுகிறார்கள். அடுத்த லவ் டுடே வரிசையில் இது ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே எஸ் ரவிக்குமார் என ஏகப்பட்ட ஆர்டிஸ்ட்டுகள். இந்த படத்தின் மீது அபார நம்பிக்கை கொண்ட ஏஜிஎஸ் இதை சொந்தமாக வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்கிறது. எந்த ஒரு இடைத்தரகர் இல்லாமல் படத்தின் மீது வைத்த நம்பிக்கைதான் இதற்கு காரணம்.
படத்தில் 48 அரியர் வைத்திருக்கும் காலேஜ் ஸ்டுடென்ட் பிரதீப் ரங்கநாதன் அடிக்கும் லூட்டியை தாங்கிக்கொள்ள முடியாமல் மிஸ்கின் சுழற்றும் சாட்டையை போல் ட்ரெய்லரில் காட்டுகிறார்கள். ஓ மை கடவுளே படத்துக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. இந்த படம் அடுத்த ஹிட் லிஸ்டில் சேரும் என ஏஜிஎஸ் முழு நம்பிக்கை வைத்திருக்கிறது.