ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வெங்கட் பிரபுவை தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய்.. ஏஜிஎஸ் குடும்பமே தளபதிக்காக செய்த வேலை

கோட் படத்தின் ஸ்பார்க் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் டிஏஜிங் தொழில்நுட்பத்தில் காலேஜ் பையன் போல் காட்சியளிக்கிறார். யுவன் சங்கர் ராஜா மட்டும் இந்த பாடலுக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனத்தால் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இந்த படத்தின் “கோட்” டைட்டிலை வேறு ஒருவர் பதிவு செய்து வைத்திருக்கிறாராம் அதனால் இதை கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று வெளியிடுகிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த படம் கோட் என்ற பெயரில் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த டைட்டிலுக்கு சிக்கல். அதனால் முழு பெயரோடு கூறுகிறார்கள்.

இந்த படத்தை பாதி தான் விஜய் பார்த்திருந்தார். இப்பொழுது முழு படத்தையும் பார்த்த விஜய் மெர்சலாகி வெங்கட் பிரபுவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார். படம் அவ்வளவு பிரமாதமாக வந்திருக்கிறதாம். நிச்சயமாக இது ஒரு பிளாக்பஸ்டர் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஏஜிஎஸ் குடும்பமே தளபதிக்காக செய்த வேலை

இந்த படத்தை ஏஜிஎஸ் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் போட்டு காட்டப்பட்டதாம். குறிப்பாக கல்பாத்தி அகோரம் அவரது மகள் அர்ச்சனா மற்றும் மனைவி அனைவரும் பார்த்து விட்டார்களாம். எல்லாரையும் இந்த படம் மிகவும் கவர்ந்து விட்டதாம். குறிப்பாக கல்பாத்தி அகோரம் அவர்களின் மனைவி படத்தை பார்த்து கண் கலங்கிவிட்டாராம்.

கோட் படம் முதல் பாதி மிகவும் காமெடியாகவும் இரண்டாம் பாதியில் எமோஷனல் கலந்த சென்டிமென்டாகவும் இருக்கிறதாம். வெங்கட் பிரபு அவருக்கே உண்டான பாணியில் கலகலப்பாக எடுத்திருக்கிறாராம். காமெடி, திரில்லர், சஸ்பென்ஸ் என எல்லாமும் கோட் படத்தில் இருக்கிறதாம்.

Trending News