AGS: ஜெயம் ரவிக்கு வார்னிங் கொடுத்த ஏஜிஎஸ்.. பலாப்பழத்தை விட்டுட்டு கலாக்காயை நம்பும் துருவன்

ஜெயம் ரவி தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாம் வேஸ்ட் குப்பை படங்களாக இருக்கிறது. 2019 பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி படத்திற்கு பின் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஓடவில்லை. பொன்னியின் செல்வன் ஓடினால் கூட அதில் இவருக்கு முழு பங்களிப்பு இல்லை.

 சமீபத்தில் அடுத்தடுத்து வரிசையாக 4 முதல் 5 படங்கள் பிளாப் கொடுத்து விட்டார். பூமி, அகிலன், இறைவன், சைரன் என வரிசையாக வந்த படங்கள் எல்லாம்  இவருக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது. எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறார்.

பலாப்பழத்தை விட்டுட்டு கலாக்காயை நம்பும் துருவன்

பிரதர், சீனி என இரண்டு படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படங்களை பெரிதும் நம்பி இருக்கிறார். இதில் சீனி படம் பெரும் பொருட்சளவில் எடுத்து வருகிறார்கள். ஜெயம் ரவி படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கும் படம். இந்த படத்தின் பட்ஜெட் 100 கோடிக்கு மேல் என்கிறார்கள். 

 இவ்வளவு இருக்கும் ஜெயம் ரவி கையில் ஒரு பிளாக்பஸ்டர் படம் வைத்துக் கொண்டுதான் இந்த மாதிரி மொக்க படங்களில் நடிக்கிறார்.இப்பொழுது அந்தப் படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். ஜெயம் ரவி அண்ணன் இயக்கிய படம் தனி ஒருவன். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இப்பொழுது எடுக்கவிருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி அகரம் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவை அழைத்து இந்த வருடம் இறுதிக்குள் தனி ஒருவன் 2 படம் வந்தே ஆக வேண்டும் என வார்னிங் கொடுத்திருக்கிறாராம். கைகளில் இருக்கும் பலாப்பழத்தை விட்டுட்டு ஜெயம் ரவி கலாக்காயை நம்பி வருகிறார்.