திங்கட்கிழமை, அக்டோபர் 28, 2024

1000 கோடிகளுக்கு ஏஜிஎஸ் போட்ட அஸ்திவாரம்.. கோட் படத்தில் விட்டதை தொக்கா தூக்கும் அர்ச்சனா கல்பாத்தி

2006ஆம் ஆண்டு திருட்டுப் பயலே படத்தின் மூலம் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது ஏஜிஎஸ். அப்பொழுது அதன் உரிமையாளர் கல்பாத்தி அகோரம். அதன் பின்னர் தொடர்ந்து 18 வருடங்கள் சினிமா துறையில் ஆட்சி செய்து வருகிறது. பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் லைகா நிறுவனத்திற்கு முன் இவர்கள்தான் தயாரித்து பெயர் பெற்றவர்கள்.

சந்தோஷ் சுப்பிரமணியம், மதராசிபட்டினம், லவ் டுடே, கவன், தனி ஒருவன், பிகில் கோட் என அடுத்தடுத்து இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கியது. சினிமா துறையில் மிக லாபகரமான தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் 400 கோடி பட்ஜெட்டில் விஜய் நடித்த கோட் படத்தை தயாரித்தனர்.

இப்பொழுது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார் அர்ச்சனா கல்பாத்தி. இவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழாவை தளபதி விஜய்யுடன் கொண்டாடிய அசத்தினார்கள். கோட் படம் அவர்களுக்கு 485 கோடி வசூலை பெற்றுத்தந்தது.

கிட்டத்தட்ட 1000 கோடிகள் வசூலை எதிர்பார்த்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு இது பின்னடைவு தான். இருந்தாலும்அவர்கள் தொடர்ந்து படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகின்றனர். இப்பொழுது அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க ஆயத்தமாகி வருகின்றனர். டிராகன், தனி ஒருவன் 2, எஸ் டிஆர் 49 என கைவசம் பெரிய படங்கள் வைத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இப்பொழுது மைதிலி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கள் உரிமைகளை கைப்பற்றி இருக்கிறார்கள். நவம்பர் மாத இறுதியில் அந்த படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனை வைத்து ஒரு பெரிய விழாவிற்கு ஏற்பாடும் செய்திருக்கிறார்கள். கோட் படத்தில் விட்டதை இதில் பிடிக்க வேண்டும் என மும்மரமாய் இறங்கிவிட்டார் அர்ச்சனா கல்பாத்தி

- Advertisement -spot_img

Trending News