கடைசியாக ஏஜிஎஸ் நிறுவனம் எடுத்த திரைப்படம் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படம் தான். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் 100 கோடியை வசூலித்து சாதனை செய்தது.
ஆனால் எவ்வளவுதான் விஜய் படம் வசூல் செய்தாலும் தொடர்ந்து விஜய் படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் கடனில் சிக்கி தவிக்கின்றன. இது ஏன் என்றே புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது சினிமா உலகம்.
சமீபகாலமாக விஜய் நடிக்கும் படங்கள் என்றால் குறைந்தது 200 கோடி வசூல் செய்து விடும் என்பதுதான் கணக்கு. முதலில் 100 கோடியை ஆச்சரியமாக பார்த்த ரசிகர்கள் தற்போது 200 கோடியை அசால்டாக பார்த்து வருகின்றனர்.
ஆனால் பிகில் படத்தில் பிகில் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பல மடங்கு லாபத்தை சம்பாதித்தனர். ஆனால் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அட்லீயால் நிறைய கடனுக்கு ஆளானதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல மீண்டும் அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் ஒரு படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறது ஏஜிஎஸ் நிறுவனம். இதற்காக ஏற்கனவே அட்லீ விஜய்யிடம் ஒன்லைன் கதையை கூறி விட்டதாகவும், தளபதி 67 படம் கண்டிப்பாக அட்லீ விஜய் கூட்டணியில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் எனவும் அவர்களது வட்டாரங்களில் உறுதியாக தெரிவிக்கிறார்கள்.
இதேபோல்தான் விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் வெளியான சர்கார் படத்தின் நஷ்டத்தை சமாளிக்க மீண்டும் அதே கூட்டணியை உருவாக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சி செய்ததும் கூடுதல் தகவல்.