செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

விஜய்யை நம்பி ஏமாந்தது தான் மிச்சம்.. தளபதியிடம் முரண்டு பிடிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம்

மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தைப் பற்றிய செய்திகள் அதிகமாக வெளியாகும் என எதிர்பார்த்தால் அதற்கு மாறாக தளபதி 66 படத்தின் செய்திகள்தான் தினமும் ஒன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தற்போது விஜய், டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விரைவில் தளபதி 65 படம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக நெல்சன் தற்போது ரஷ்யாவில் லொகேஷன் வேட்டையில் இறங்கியுள்ளார்.

இதற்கான புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தை தயாரிக்க பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர். அதில் ஏற்கனவே விஜய்யை வைத்து சில நஷ்டங்களை சந்தித்த தயாரிப்பு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளன.

அந்த வகையில் விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவான பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யிடம் முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறதாம். தளபதி 66 படத்தின் கால்சீட் கேட்டு தினமும் விஜய்யை தொந்தரவு செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

முதலில் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்த பிகில் படம் அட்லீயின் கவனக்குறைவால் படம் 180 கோடியை தாண்டியது. அதனைத் தொடர்ந்து பிகில் படம் 300 கோடி வசூல் செய்தாலும் சில கோடிகள் மட்டுமே தயாரிப்பு நிறுவனத்துக்கு லாபம் கிடைப்பதாக கூறுகின்றனர்.

vijay-ags-bigil
vijay-ags-bigil

இந்நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தளபதி விஜய்யை வைத்து சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை அடைந்தே தீரவேண்டும் என்பதற்காக விஜய்யிடம் தொடர்ந்து தளபதி 66 படத்தின் கால்சீட் கேட்டு வருகிறார்களாம். இதனால் தற்போது விஜய் சங்கடத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறாராம். ஏஜிஎஸ் மட்டுமில்லாமல் ஏற்கனவே விஜய் அட்லீ கூட்டணியில் உருவான மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனமும் வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News