வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

கோலிவுட்டில் எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் தனது உடன் பிறவா தம்பியாக அட்லீயை நடிகர் விஜய் பார்த்து வருவது தான் மிகப்பெரிய ஆச்சரியமான ஒன்று. அதற்கான காரணம் விஜய்க்கு கிட்டத்தட்ட தெறி, மெர்சல், பிகில் என மூன்று மெகாஹிட் படத்தை அடுத்தடுத்து அட்லீ கொடுத்தார். மேலும் இந்த படங்களின் மூலமாக தான் விஜய்யின் மார்க்கெட்டும் உச்சத்தில் போனது.

அந்த வகையில் இயக்குனர் அட்லீயும் விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கி, தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனிடையே அட்லீ பாலிவுட்டுக்கு சென்று படம் எடுக்க காரணமே விஜய் தான் என ஜவான் பட ஆடியோ லாஞ்சில் அட்லீ கூறினார்.

Also Read: மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய ஷாருக்கான்.. ரெட் ஜெயண்டால் அட்லீ கூட்டணிக்கு விழப் போகும் மரண அடி

அந்த அளவுக்கு இவர்கள் இருவரும் பாசத்துக்கு பாசம், தொழிலுக்கு தொழில் என விட்டுக்கொடுக்காமல் இணைந்துள்ளனர். இதனிடையே அட்லீ, ஜவான் படத்தை இயக்கிய கையோடு விஜய்யின் தளபதி 68 படத்தை அவர் தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை எடுக்க ஆயத்தமாகியுள்ளார்.

இதனிடையே ஆரம்பத்தில் தனது தளபதி 68 படத்தை தயாரிக்கும் பொறுப்பை நடிகர் விஜய் சத்யஜோதி பிலிம்ஸிடம் தான் ஒப்படைத்துள்ளார். மேலும் அட்லீ இயக்கத்தில் இப்படத்தில் நடிக்கலாம் என்பது தான் விஜய்யின் பிளானாக இருந்து வந்தது. ஆனால் சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தவரையில் பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுக்க விரும்பமாட்டார்கள். அதுவும் அட்லீ இயக்குகிறார் என்றால் சொல்லவே வேண்டாம், இஷ்டத்துக்கு படத்தின் பட்ஜெட் எகிறும் என பயந்துள்ளனர்.

Also Read: விஜய்யை கழட்டிவிட்டு கமலுக்கு கொக்கிப்போடும் அட்லீ.. ஜவான் ரிலீசுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட அலப்பறை

இதன் காரணமாக விஜய்யிடம் அப்படி, இப்படி என கூறி மழுப்பி இந்த பேச்சை அப்படியே டீலில் விட்டனர். இதையறிந்த விஜய், ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று தளபதி 68 படத்தை இயக்கும்படி கேட்டுள்ளார். அதன்பின்னர் அந்நிறுவனம் முழு சம்மதம் தெரிவித்த நிலையில், அட்லீயை வேண்டாமென முடிவோடு இருந்தனர். அதற்கான காரணம் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.

ஆரம்பத்தில் இப்படத்துக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் வேறு, ஆனால் அட்லீ படத்தை எடுக்கிறேன் என சொல்லி இஷ்டத்துக்கு பட்ஜெட்டை பெரிதாகியுள்ளார். இதன் காரணமாக அட்லீயை மறுபடியும் கூட்டு சேர்க்க ஏ.ஜி.எஸ் விரும்பாததால் வெங்கட் பிரபுவை வைத்து தளபதி 68 படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர். இப்படி எங்கே போனாலும் அட்லீயை கண்டு தயாரிப்பு நிறுவனங்கள் பயப்படுவதால், தற்போது தளபதியும் அட்லீ இல்லாத வருத்தத்தில் பல்லை கடித்துக்கொண்டு ஓகே சொல்லியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: ஷாருக்கானின் சில்மிஷத்தால் 4 வருடங்களாக இழுத்தடித்த ஜவான் படம்.. அட்லீயை வச்சு செய்த சூப்பர் ஸ்டார்

Trending News