சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நெசவாளர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திய அதிமுக தேர்தல் அறிக்கை.. மகிழ்ச்சியில் நெசவாளர்கள்

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான தேர்தல் அறிக்கையை மும்மரமாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றி இருப்பதாக நெசவாளர்கள் உருக்கமாக தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு மாற்றங்களையும் நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி, விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட் ஆக உயர்த்தப்படும், நெசவாளர் நல வாரியம், மழைக்கால நிவாரணம் 5000 ரூபாய் வழங்கும் திட்டம் என பல புத்துணர்வூட்டும் திட்டங்களை நெசவாளர்களுக்கு அறிவித்துள்ளது அதிமுக அரசு. இந்தத் திட்டங்களை எல்லாம் நெசவாளர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.

அதாவது அதிமுகவின் தேர்தல் அறிக்கை  கடந்த 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் நெசவாளர்களுக்கு  இதுவரை யாரும் அறிவிக்காத வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்கள் ஆகியோர் பெற்ற கடன் தொகையில் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

edappadi-jayalalitha
edappadi-jayalalitha

மேலும் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்  நெசவாளர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக நெசவாளர்கள் உருக்கமாக தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் நெசவாளர்களுக்கு என நல வாரியம் அமைத்தல், விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டுகள் ஆக உயர்த்தி வழங்குதல், மழைக்கால நிவாரணம் 5000 ரூபாய் வழங்குதல், கைத்தறி ஆடைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்தல், நெசவாளர்களுக்கு ஏற்ற வகையில் நூல் விலை வழங்குதல் என நெசவாளர்களுக்கான பல அறிவிப்புகளை அதிமுக அரசு அறிவித்துள்ளது.

எனவே இவ்வாறு நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அதிமுக அறிவித்துள்ள இந்த தேர்தல் அறிக்கை கட்டாயமாக தங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் என நெசவாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

Trending News