VJ சித்ரா: நடிகைகளின் தற்கொலை மரணம் என்பது புரியாத புதிராகவே இன்று வரை இருந்து வருகிறது.
தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்று தெரியாமலேயே பல நடிகைகளின் மரண வழக்குகள் மூடப்பட்டு விட்டது.
அந்த லிஸ்டில் நான்கு வருடத்திற்கு முன்பு இணைந்தவர் தான் சின்னத்திரை நடிகை VJ சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்னும் கேரக்டர் தமிழகம் எங்கும் பெரிய அளவில் ரீச் ஆனது.
தான் எதிர்பார்த்த வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உயிரிழந்தார்.
அரசியல் பிரமுகரின் பரபரப்பு பேட்டி!
இதற்கு காரணம் அவருடைய கணவர் ஹேம்நாத் தான் என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுதலையானார்.
ஒரு சில மாதங்களில் சித்ராவின் தந்தை காமராஜர் உயிரிழந்திருக்கிறார். அதிலும் சித்ராவின் ரூமில் அவருடைய துப்பட்டாவை கழுத்தில் மாட்டி தூக்கு போட்டு இறந்திருக்கிறார்.
இது குறித்து முன்னாள் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி இன்றைய பேட்டியில் தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இவர் அதிமுக கட்சியின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய பேட்டியில் VJ சித்ரா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே கிடையாது என்று சொல்லி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகளின் இறப்புக்கு என்ன காரணம், யார் காரணம் என்பது அவருடைய அப்பாவுக்கு தெரிந்திருக்கும்.
இனி இவர்களிடம் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்ற கவலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் எனவும் நிர்மலா பெரியசாமி சொல்லி இருக்கிறார்.