சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

அதிமுக ஆட்சியை பிடிப்பது உறுதி.. எதிர்க்கட்சிக்கு அல்லு விடும் வகையில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகள்!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற  இருப்பதால் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், சோசியல் மீடியாக்களும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் இந்த தேர்தல் முன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் மு கருணாநிதி ஆகிய இருபெரும் அரசியல் ஜாம்பவான்களின் மறைவுக்குப் பிறகு தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக மக்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த நான்கரை ஆண்டுகளாக முதல்வர் பதவி வகித்த எடப்பாடியார் எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி அவர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்த காரணங்களால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்குமா அல்லது திமுகவிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.

இது ஒரு புறமிருக்க தற்போது மீண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என நான்கு கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி எதிர்க்கட்சியை அதிர வைத்துள்ளது.

ஏற்கனவே இதுவரை வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக இருந்து வருகிறது. ஆனால் சில கருத்துக் கணிப்புகளில் மட்டும் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

தற்போது இவை அனைத்தையும் உடைக்கும் வகையில் ராஜ்டிவி, குமுதம், ஆதன் தமிழ் மற்றும் நெட்வொர்க் டெமாக்ரசி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி எதிர்க்கட்சியினரை அதிர வைத்துள்ளது. ஏனென்றால் அவற்றின் முடிவுகள் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே உள்ளன.

கருத்துக்கணிப்பு முடிவுகளின் முழு விபரம் இதோ:

1. குமுதம் முடிவுகள்:

அதிமுக- 125 இடங்கள்

திமுக- 109 இடங்கள்

2. ஆதன் தமிழ்:

அதிமுக- 130

திமுக- 100

3. நெட்வொர்க் டெமாக்ரசி:

அதிமுக- 122

திமுக- 111

4. ராஜ் டிவி:

அதிமுக- 124

திமுக- 94

மற்றவை- 16

எனவே, இந்த முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் அதிமுக தான் தொடர்ந்து தனது ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும் என தெளிவாக தெரிகிறது. இதனால் எதிர்க் கட்சியான திமுக அதிர்ந்து போயுள்ளது.

Trending News