வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஸ்வரூபம் எடுக்க போகும் சசிகலா.. லீக்கான புதிய ஆடியோவால் கதிகலங்கிய அதிமுக

தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று அதிமுக. இக்கட்சி எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி பின்பு ஜெயலலிதா வழி நடத்தி தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கட்சியாக உருவாக்கினர். அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்காக மட்டுமே ரசிகர்கள் தொண்டர்களாக உள்ளனர்.

சமீபகாலமாக இக்கட்சியில் இரண்டு தரப்பினர் பதவிக்காக மோதிக்கொண்டனர். அதன்பிறகு கட்சியில் பெரியளவு தொண்டர்களால் கவனிக்கப்படாமல் தற்போது மற்ற கட்சிகள் போலவே ஒரு சாதாரண கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும் ஒரு சில தொண்டர்கள் தொடர்ந்து கட்சியின் மீது விசுவாசத்துடன் இருந்து வருகின்றனர்.

ஊழல் வழக்கில் சசிகலா மற்றும் ஜெயலலிதா சிறைக்கு செல்லும் போது சசிகலா எடப்பாடி பழனிச்சாமி என்ற மாமனிதரை நம்பிக்கையின் பெயரில் முதலமைச்சர் பதவியைக் கொடுத்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு பெரும்பாலும் அதிமுக தொண்டர்கள் சசிகலாவிற்கு மீண்டும் முதலமைச்சர் பதவியை கொடுப்பார் என எதிர்பார்த்தனர்.

sasikala
sasikala

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முதலமைச்சர் பதவி மேல் ஆசை வர சசிகலாவை அதிமுக கட்சியிலிருந்து அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இருந்து ஒதுக்கினார். அதன்பிறகு சசிகலா கட்சியிலிருந்து சற்று விலகுவதாக தெரிவித்தார்.

தற்போது அதிமுக தொண்டர்கள் சசிகலாவை அணுகி நீங்கள் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் இருதரப்பினர் மோதலில் இருந்தும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதற்கு சசிகலா கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் யாரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும், நீங்கள் மிகவும் மனவேதனையில் இருப்பது என்னால் உணர முடிகிறது. விரைவில் வந்து தொண்டர்களை பார்ப்பேன் என தொலைபேசியில் கூறியுள்ளார். இந்த ஆடியோ லீக்கானத்தால் அதிமுக தரப்பில் ஒரு சலசலப்பு ஏற்பட்டு உள்ளதாம்.

Trending News