தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும், பத்திரிக்கையாளர்களும் இந்த சட்டமன்றத் தேர்தலில் யார் முதல்வர் ஆவார் என்ற கருத்துக் கணிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அசோகா அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மையம் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் அதிமுக தான் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.
அதாவது அசோக அறக்கட்டளை மற்றும் வாக்காளர் கல்வி மையம் என்ற தன்னார்வ அமைப்பு சட்டமன்ற தேர்தலில் பெண்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் யாருக்கு வாக்களிக்க உள்ளனர் என்ற கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். மேலும் தொகுதியில் அடிப்படையில் இல்லாமல் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளும் வகையில் அறிவியல்பூர்வமாக இந்த கருப்பு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகளின் ஆதரவு அதிமுக கூட்டணிக்கு என்று 52 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதேபோல் பெண்களின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு தான் என்று 57 சதவீதம் பேரும், தொழிலாளர்களின் வாக்கு அதிமுக கூட்டணிக்கு என்று 36 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்து உள்ளதாக 34 சதவீதம் பேரும், வீழ்ச்சியடைந்துள்ளதாக 30 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு மிக சிறப்பு என்று 28 சதவீதம் பேரும், சிறப்பு என்று 39 சதவீதம் பேரும் தெரிவித்து முதலமைச்சருக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு, கொரோனா நிவாரணம், பொங்கல் பரிசு, வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிப்பு, குடிமராமத்து ஆகிய பல நலத் திட்டங்களை தமிழக மக்கள் வரவேற்பதாகவும், இவை பயனுள்ளதாக இருப்பதாகவும் 54 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தமிழக முதல்வர் எடப்பாடி யார் தலைமையில் தமிழக அரசு செயல்படுத்திய அனைத்து திட்டங்களும் மக்கள் அனைவருக்கும் சென்றடைந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் அதிமுக தேர்தலில் அதிகளவு வாக்குகளை பெறும் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று 32 சதவீதம் பேரும், முகஸ்டாலின் என்று 30 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல் அதிமுகவிற்கு எதிரான அலை இல்லை என்று 41 சதவீதம் பேரும் உள்ளதாக 22 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் பெண்களின் வாக்குகளை கவர்ந்த தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று 40 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கருத்துக்கணிப்புகள் மூலம் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்படுத்திய அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளதோடு, தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது. விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் இந்த மூன்று பேரின் வாக்குகளை வெல்ல போகும் அதிமுக.