சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மொபைல் காலர் டியூன் முதல் சோசியல் மீடியா வரை.. பிரபலமான அதிமுகவின் பிரச்சார பாடல்கள்!

நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வரும் நிலையில், அதிமுக வெளியிட்டுள்ள விளம்பரங்கள் மற்றும் விளம்பர பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஏனென்றால் ‘வெற்றி நடை போடும் தமிழகம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பாடலானது தற்போது சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் விளம்பரமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அதிமுக கட்சியின் விளம்பர பாடலான, ‘தொடரட்டும் வெற்றி நடை என்றென்றும் இரட்டை இலை’ என்ற பாடலும் மெகா ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் இந்த பாடலின் மூலம் அதிமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களுக்கு புரியும்படி எளிமையான நடையில் விளம்பரம் செய்யப்படுகிறது.

இதேபோன்று ‘தில்லு முல்லு திமுக’ என்கின்ற தலைப்பில் வெளியிடப்பட்ட விளம்பரங்களும் அதன் நகைச்சுவை தன்மையும் மக்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக உள்ளது.

EPS
EPS

அதேபோல் அதிமுகவின் விளம்பர பாடல்கள் தற்போது மொபைல் காலர் டியூன் முதல் சோசியல் மீடியா ஸ்டேட்டஸ் வரை ரீச் ஆகிவிட்டது. இவ்வாறு தேர்தலுக்காக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரச்சார விளம்பரங்கள் மக்களிடையே ரீச் ஆகி வரும் உள்ளதால்,

இந்த விளம்பரங்களின் மூலம் எளிய மக்களின் துன்பங்களையும், அவர்கள் தேவைகளையும் அதிமுக அரசு பூர்த்தி செய்திருப்பதை காட்டும் வகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Trending News